உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15/ قائامح சுெ.சமுத்திரம் 'அப்பாடா, இப்போதாவது என் வயித்தில் பாலை ஊத்தினிங்க பாய்." திவான் லேசாக முகஞ்சுளித்தார். காரியம் ஆவதற்காக காக்கா (அண்ணன்) என்கிற வார்த்தையைப் பயன்படுத்திய இந்த காண்ட்ராக்டர், அது முடிந்துவிடும் என்று தெரிந்த உடனேயே 'பாய்' என்று பேச்சை மாற்றியது அவருக்குச் சிறிது, நெஞ்சைத் தட்டத்தான் செய்தது. ஆனாலும் அவர் கவனிப்பதாகச் சொன்னதால், காக்கா பாயானது பெரிதாகத் தெரியவில்லை. நாளைக்கே, தன்னை அவர் கவனிக்கணும்... பைசல் செய்துக் கலாம். திவான், காண்ட்ராக்டர் காதைக் கடித்தார். இதுவரைக்கும் செலவழிச்சதை நாளை பைசல் செய்துக்கலாம் வீட்டுக்கு வா... செக்கு தாறேன்... இந்தச் சமயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், எந்த விகிதாச்சாரத்தில் கவனிக்க வேண்டும் என்பதைப் பேசுவதற்காகவோ என்னவோ வேப்பமரத்திற் குப் பின்னால் ஒதுங்கி னார்கள். அப்போது நான்கைந்து பேர் மசூதிப் பக்கம் வருவதைப் பார்த்து விட்டு திவான் முகமது அந்த மசூதி வாயிலுக்குக் கம்பீரமாக நடந்து வந்தார். ராமலிங்கம் பின்னால் நொண்டியடித்து நடந்தார். அங்கே வந்த நான்கைந்து பேரும் திவானைப் பார்த்தபடி நின்றார்கள். திவானோ, அந்த அய்வரில் அமீரை மட்டுமே நோட்டமிட்டார். ஐம்பது வயதுக்குப் பிறகும் தாடி வைக்காத இவனெல்லாம் எவன்... தலையில் ஒரு தொப்பிகூட வைக்காமல் கைக்குட்டையைக் கட்டியிருக்கான். உடம்பு மட்டும் தடியங்காய் மாதிரி வச்சிருக்கான். இவனெல்லாம் ஒரு முஸ்லீமாம்.' என்றாலும், ராமலிங்கம், திவானைப் போல் அமீரைப் பார்க்கவில்லை. அவரையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்போல் அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, திவானிடம் தான் பொதுச் சமாச்சாரங் களைத்தான் பேசியதாக ஒரு அனுமானத்தை ஏற்படுத்தும்படிப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/17&oldid=882368" இலிருந்து மீள்விக்கப்பட்டது