உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வேரில் பழுத்த பலா

தனிமையைப் பன்மையாக்கினார்கள். ஒருவர். அவன் தூரத்து உறவு பள்ளிக்கூட மேனேஜர் இன்னொருவர் காண்டிராக்டர் ஜெகதலப் புரட்டர்கள். சரவணன், மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

"உட்காருங்க."

"எங்களை ஞாபகம் இருக்குதா..?"

காண்டிராக்டர் கண்ணடித்துப் பேசினார்.

"அவனுக்கு இப்போல்லாம் கண்ணு தெரியுமா."

"எப்படி இருக்கீங்க.

"நாங்க என்னப்பா. கிராமத்து ஆட்கள். ஒன்னை மாதிரியா ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கோம்?"

"எப்போ. வந்தீங்க?"

“ஒரு விஷயமாய் வந்தோம். அப்படியே ஒன்னையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தோம். இவரை பொதுப்பணித் துறையில் பிளாக்லிஸ்ட் செய்திருக்காங்க. ஆறுமாதமாய் காண்டிராக்ட் வராமல் அவஸ்தைப் படுறார். நீ. அந்த டிபார்ட்மெண்ட்ல. யாருக்காவது."

"எனக்கு யாரையும் தெரியாதே."

"செகரட்டேரியட்ல கேட்டோம். ஒன்கூட முஸொரிவிலயோ எதுலயோ டிரெயினிங் எடுத்தவரு. அந்த டிபார்ட்மெண்ட்ல டெபுடி செகரட்டரியாய் இருக்கார். பெயர். கமலேக்கர்."

"கமலேக்கரா? நல்ல பையன். நேர்மையானவன்." "ஒரு சின்ன போன் போட்டு." "இவர் என்ன தப்புப் பண்ணுனாராம்?" "என்னத்தையோ ஒரு கட்டிடத்தை சரியாய் கட்டலியாம். எவன்

யோக்கியமாய் கட்டுறான்?"

"டில்லிலயும், பெங்களுர்லயும். ரெண்டு கட்டிடங்கள் இடிஞ்சு.

பலர் செத்தாங்க பாருங்க. அது மாதிரி ஆகப்படாது பாருங்க."

"என்னமோப்பா. எதாவது செய். விதி முடிஞ்சவன் சாவான்." "கமலேக்கர், இதுல ரொம்ப கண்டிப்பு." "சும்மா பேசிப் பாரேன்."

"இந்த மாதிரி விஷயத்துல, நான் அதைவிடக் கண்டிப்பு