உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வேரில் பழுத்த பலா

வயதிருக்கும். காதோரம் தெரிந்த நரை, அவர் தலைக்கு டை அடித்திருப்பதைக் காட்டியது. இந்த லட்சணத்தில் லேசாக ஒரு சின்னக் குடுமி. வெளியே தெரியாது. பத்மாவுக்கு முப்பத்தைந்து தேறும். அவள் போட்டிருந்த பிராவுக்கு இருபது இருக்கும். அவனுக்கு எப்படியோ. அவள் கவர்ச்சிதான். செளரிராஜன், சீல் கவரைப் பார்த்தபடியே கேட்டார். "இது அன்னத்தோட பெர்சனல் பைல் லார். என்ன ஒரு நாளும் இல்லாமல் லேட்டு.?"

சரவணன் பதிலளிக்கவில்லை. அவன் கரங்கள் அன்னத்தின் பெர்சனல் பைலைப் புரட்டின. அவன் கொடுத்த மெமோ, அவள் பெற்றுக் கொண்டேன்' என்று எழுதி கையெழுத்திட்ட வாசகத்தோடு கெட்டியாக இருந்தது. எரிச்சலை அடக்கியபடியே கேட்டான்

"அன்னத்துக்குக் கொடுத்த மெமோவை பைல்ல போட வேண்டாம். கிழிச்சிடுங்கன்னு சொன்னேன். நல்லாத்தான் வச்சிருக்கீங்க." "நாம் கையெழுத்துப் போட்டதை நாமே கிழிக்கப்படாது ஸார். அப்புறம் ஆபீஸ்ல குளிர் விட்டுடும்."

"குளிர் விடாமல் இருக்கத்துக்கு. கொடுத்தது மாதிரி மெமோ. அந்தக் குளிர். மலேரியா ஜூரமாய் மாறாமல் இருப்பதற்கு, அதை, அவங்களுக்குத் தெரியாமல் கிழிக்கிறது. இது சட்ட விதிகளுக்குப் புறம்பானதுதான். ஆனால் அதன் உணர்வுக்கு எதிரானது அல்ல. குறைந்த பட்சம், ஒங்க மெமோவை கிழிக்கப்படாது ன்னு நீங்க என்கிட்டேயே சொல்லியிருக்கலாம். நீங்க இப்படி நடப்பிங்கன்னு நான் நினைக்கல. திருக்குறளில் கடிதோச்சி மெல்ல எறிகன்னு ஒரு இடத்துல வரும். கீழே இருப்பவங்களை கன்னத்துல அடிக்கலாம். வயித்துல அடிக்கப்படாது என்று அர்த்தம் அதுக்கு."

"நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு நானும் நினைக்கவே இல்ல ஸார். நம்முடைய கையெழுத்தை நாமே கிழிக்கப் படாதுன்னு தான்."

"சரி. இந்த ஹெட்கிளார்க் மேடத்துக்கு போனவாரம் ஒரு மெமோ கொடுத்தேன். அதுலயும் அழுத்தமாய்த்தான் கையெழுத்துப் போட்டேன். அப்போ. அதை நீங்க எடுத்துட்டு வந்து பாவம், குட் ஒர்க்கர் ஸார் டிஸ்கரேஜ் பண்ணப்படாதுன்னு சொன்னிங்க கிழிச்சுப் போடுங்கன்னு சொன்னேன். நல்லாத்தான் கிழிச்சிங்க... பட். அன்னமுன்னு வந்தால்."

செளரிராஜன் திண்டாடிப் போனார். பத்மா தலை காட்டினாள். "நானே யோசித்தேன். இந்த அன்னம். ரெண்டு வருஷமாய் வேலை பார்க்கிறாள். தானாய் செய்யத் தெரியாட்டாலும்,