உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வேரில் பழுத்த பலா

ராமச்சந்திரனிடம், எதையோ சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். உமா, ஒரு ரிஜிஸ்டரை தனது மடியில் கிடத்தி புரட்டியபடிதான். சற்றுத் தள்ளி, ரேக்கை குடைந்து கொண்டிருந்த பியூன் அடைக்கலத்திடம், "அந்தப் புடவை சரியில்லப்பா." என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸர் அல்லது ஏஓ என்று அழைக்கப்படும் நிர்வாக அதிகாரி செளரிராஜன், பாக்கெட் டிரான்ஸிஸ்டர் போல் இருந்த கணக்கு யந்திரத்தை - யந்திரம் என்று சொல்வது கூடத் தப்பு - கணக்குக் கருவியை தட்டித் தட்டிப் போட்டு, ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டுதான், ஈஸ்வரியை ரசித்தார். கை, கணக்கை எழுதியபோது, வாய் "ஒங்க ஆத்துல இன்னிக்கு. என்ன குழம்பு" என்று தன்னிடம் பேசாமல், சபார்டினேட் பயல் சம்பத்திடம் பேசிக்கொண்டிருந்த டைப்பிஸ்ட் ஈஸ்வரியிடம் கேட்டார்- அவள், நாக்கு ருசியைப் பற்றி மட்டுமே பேசுகிற வயதில் இல்லை என்பது தெரிந்தும்.

மேலே சித்தரிக்கப்பட்டது எஸ்டாபிளிஸ்மென்ட் செக்ஷன். இதுபோல் வாங்கும் பிரிவு, வந்ததை காக்கும் பிரிவு, கணக்குப் பிரிவு, விநியோகப் பிரிவு என்று அந்த அலுவலகம் பலப்பல பிரிவுகளாய் இருந்தன. "அவற்றிற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பிரிவு நாற்காலி களுக்கும், இன்னொரு பிரிவு நாற்காலிகளுக்கும் இடையே இடைவெளிகளும் உண்டு. இந்தப் பிரிவுகளின் இன்சார்ஜ்கள் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் போல், பெரிய நாற்காலி, பெரிய மேஜை சகிதமாய் காட்சியளித்தார்கள்.

இத்தனை பிரிவுகளிலும் ஒட்டியது போலவும், ஒட்டாதது போலவும், இந்தியகிராமத்துச் சேரிபோல் சற்றுத் தள்ளி, அன்னம் இருந்தாள். மை கறையும், கோந்து கறையும், வெட்டப்பட்ட சோளத் தோட்டத்தில் எஞ்சி நிற்கும் அடிக்காம்புகள் போல், எரிந்து எரிந்து, இறுதியில் திரிகள் நின்று. வெள்ளை வெள்ளையாய் இருந்த மெழுகுவர்த்தித் துண்டுகளும் கொண்ட மேஜையில், நான்கு பக்கமும் காகிதக் குவியல்களைப் பரப்பியபடி, அதன் நடுப்பக்கம், ஒரு ரிஜிஸ்டரைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரே, இரண்டு பியூன்கள், தயாராக இருந்தார்கள். சீல் போட வேண்டுமா? கவர் செய்ய வேண்டுமா? எதையும் கவரப் பண்ண வேண்டுமா? ரெடி. அங்கே ஆட்கள் எப்படியோ, அலுவலகம் அழகாகத்தான் இருந்தது. குண்டூசி, காகிதம், இரப்பர், பால் பாயிண்ட் பேனா, பென்ஸில், ஸ்டேப்லர், பைல்கள் உட்பட பல்வேறு வகையான ஸ்டேஷனரிப் பொருட்களை, கொட்டேஷன் மார்க்கெட்டில் வாங்கி, பல்வேறு அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு அந்த