சோதனைப் புதுமை
- இலக்கிய யோகி. வகே.
ஒடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ரயில் வண்டியும் ஒரு தனி ു. அதில் நாள்தோறும் விதவிதமான உணர்ச்சி நாடகங்கள் நடைபெறுகின்றன. உணர்ச்சிகளின், எண்ணங்களின், திட்டமிடுதல்களின் உருவங்களான வித விதமான மனிதர்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். அவர்களிடையே எத்தனையோ சோக நாடகங்கள், காதல் காவியங்கள், திகில்-மர்ம நாவல்கள், பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நெடுங்கதைகள் மறைந்து கிடக்கின்றன.
அப்படிப்பட்ட அனுபவக் கதைகளில் ஒன்றை நண்பர் க. சமுத்திரம் 'நிழல் முகங்கள் என்ற சுவை நிறைந்த நாவலாகப் பதிவு செய்திருக்கிறார். இது புதுமையான நாவல், சோதனை ரீதியான படைப்பு என்றும் சொல்லலாம்.
இந்த நாவலின் நிகழ்வுகள் அனைத்தும் ஒடுகிற ரயில் வண்டியிலேயே நடைபெறுகின்றன. எத்தனை ரகமான உணர்ச்சி அனுபவங்கள்! அவற்றை எல்லாம் இணைக்கும் உயிர்ச்சரடாக விளங்குகிறது புனிதமான அன்பு
ரயிலிலேயே உழைத்து, ரயிலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளிகளின் அன்பின் அடிப்படையில் வளர்க்கிற மனிதநேயம் எத்தகைய மாண்புமிக்கதாகப் பரிணமிக்கிறது. பேச்சுத் திறன் இழந்துவிட்ட ஒரு அனாதைப் பையனிடம், அவர்கள் கொண்டுள்ள பிரியமும், காட்டுகிற பரவசமும் நேசமும் எவ்வளவு உயர்ந்தவை அவர்கள் ஆதரவில் வளர்கிற அந்த அநாதைச் சிறுவன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் அன்பும், ஆதரவற்றுத் திண்டாடுகிறவர் யாராக இருப்பினும் அவர்களை அரவணைத்துக் கொள்கிற நேயமும் உண்மையான மனிதத்தின் உயர் பண்புகளாகப் பிரகாசிக்கின்றன.
அன்பின் உருவங்களாக நடமாடும் அந்தத் தொழிலாளர்களும், அவர்களது செல்லப் பிள்ளையாக விளங்கும் அநாதையான வாய் பேசாச் சிறுவனும், அவர்களது பாதுகாப்பை நாடி வந்த அபலைப் பெண்ணும், வெறும் நிழல் முகங்களாக இல்லை. உயிர்ப்பும் உணர்வும் நிறைந்த ஜீவசித்திரங்களாக இயங்குகிறார்கள் இந்த நாவலில்.
உறவுக்காரர்களால் வஞ்சிக்கப்பட்ட அந்த அபலைப் பெண் பணக்கார உறவுக்காரனால் ஒடும் ரயிலிலேயே வேட்டைப் பிராணிபோல் துரத்தப்பட்டு, பலவித சோக அனுபவங்களுக்கு இலக்காகிற துர்ப்பாக்கியசாலி - அன்பும்