30 சு. சமுத்திரம்
"உங்களுக்கு என்கிட்டே என்ன சார் பேச்சு? இனிமேல் எது பே சணு ம் னு ன் னா லும் , எ ல் லோ ரை யு ம் பார் த் து ப் பொதுப்படையாப் பேசுங்க"
அரும்புமீசை சீனிவாசன், அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் பிறகு கோபப்பட்டது போல் எழுந்து, அங்கிருக்கப் பிடிக்காதது போல் வெளியே போனான். உடனே, ரயில் பயல் அந்தப் பெண்ணை அவன் இருந்த இடத்தில் உட்காரும்படி அவள் கையைப் பிடித்துப் பிடித்து இழுத்தான். அவள் தயங்கியபோது பலராமன், 'உட்காரு தங்கச்சி” என்று சொல்லவேண்டிய அனைத்தையும் அந்த இரண்டு வார்த்தைகளிலேயே சொல்லி விட்டான். அவளும் தயங்காமலே உட்கார்ந்தாள்.
நாராயணன், கேட்டான்:
'இன்னிக்கி முழுவதும் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். ஏதாவது வேணுமா? நாங்க உன் கூடப் பிறக்காத பிறப்புகள். எங்க மேல கத்தி விழுந்தாலும் கவலையில்லை. உன் மேல ஒரு துரும்பு விழக்கூட சம்மதிக்க மாட்டோம்"
அவள் நெகிழ்ந்து போனாள். அந்தத் தொழிலாளர்களின் இருந்த வரிசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டபடியே அழுதுவிட்டாள். மனச்சுமையைக் கரைப்பது போன்ற கண்ணிர் வெள்ளம். மனிதாபிமானத்தைக் கண்டது போன்ற நெகிழ்வு. காஞ்சனா அவள் தோளைப் பற்றினாள். தெலுங்கம்மா அவள் முதுகைத் தட்டினாள். அப்போது அந்த ரயில் பயல் வெளியே நடக்கப்போனான். பலராமன் அவன் கையைப் பிடித்து இழுத்து எங்கடா என்றான். உடனே பயல் மடிக்குள், திணிக்கப்பட்டதே இரண்டு ரூபாய் நோட்டைச் சுட்டிக் காட்டி அவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு வரப்போவதாக வாய்க்கருகே கையைக் கொண்டு போய் தனக்குத்தானே செய்கையால் ஊட்டிக் கொண்டான். பலராமன், கத்தினான்.
'ஏண்டா பெரிய மனுஷா! எங்களுக்குத் தெரியாதா? உட்காருடா. இந்தச் சமயத்துல அவங்களுக்கு சாப்பாடு முக்கியமில்ல. அவங்களைச் சாப்பிட வாரவங்களைச் சாம்பாராய் ஆக்குறதுதான் முக்கியம். ஆமாம். உங்களுக்கு எந்த ஊரும்மா? என்ன நடந்தது?
"ஏம்ப்பா கேள்விக்கு பதில் சொல்ற நிலைமையிலேயா அந்தப் பொண்ணு இருக்குது? எதுக்கும் நேரம் காலம் வேணர்ம்"
அந்தப் பெண் சொன்னவனையும் சொல்லப்பட்டவனையும் ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.