உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த ரயில், அந்த பெண்ணைப் போலவே, தண்டவாளத்தில் இருந்து குதிக்கப் போவதுபோல், தாவிக் கொண்டிருந்தது.

அந்தப் பயல், ஒடிப்போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவனை இழுத்துப் போட்டுவிட்டு அவளால் குதிக்க முடியும் என்றாலும், உயிர் பயத்தாலோ அல்லது அவன் கண்களில் தோன்றிய அவனின் அன்பு முத்திரைக்குக் கட்டுப்பட்டோ சிறிது பேசாது நின்றாள். உடனே, அவன் அவளைச் செல்லமாக இழுத்து வாசலோரத்திற்கும் ரயில் பெட்டியின் பின்பகுதி முடியும் இடத்திற்கும் இடைப்பட்ட முக்கோணப்பகுதியில் நிற்க வைத்தான். அவள் லேசாய் நடந்து ரயில் பெட்டியின் வழிப்பகுதியை எச்சரிக்கையோடு பார்த்துவிட்டு அங்கு யாரும் இல்லை என்ற சோக திருப்தியோடு மீண்டும் தின்ற இடத்திற்கு வந்தாள். அவள் கண்களில் நீர்ச் சொட்டுக்கள் துளித்துளிகளாக விழுந்து கொண்டிருந்தன. பயல், அவள் பக்கத்தில் போனான். அவள் வலது கையையைப் பற்றிக் கொண்டான். பிறகு, தனது வலது கையை முஷ்டியாக்கிப் பெருவிரலை மட்டும் நீட்டி, காதுக்கருகே உயர்த்தி என்ன விஷயம் என்பதுபோல் சைகை செய்தான். பிறகு, நானிருக்க பயம் ஏன் என்ற தோரணையில் தனது வலதுகையால் தன் மார்பைத் தட்டினான். கையைச் செங்குத்தாக நிறுத்திக்காட்டினான்.

அவளால் தாள முடியவில்லை.

மார்பளவு உயரத்திற்கிருந்த அந்தப் பயலின் தலைமேல் தன் முகத்தைச் சாய்த்தாள். அப்போது பயலின் பின் கழுத்தில் அவளது கண்ணீர் சுடச்சுட விழுந்து கொண்டிருந்தது. அவள் சட்டென்று தலையைத் துாக்கி அவனிடமிருந்து விடுபட்டாள். அந்த சின்னப் பையனைப் பெரிய மனிதனாகப் பார்த்தபடியே அவனிடம் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதுபோல் அவன் தோளில் கை போட்டு அவலக்குரலில் அழுகை ஒலிக்க முறையிட்டாள்.

"மனிதங்க செத்துப் போயிட்டதா நான் தீர்மானிச்ச போது தெய்வம்போல வந்தப்பா. இந்த ரயில்ல பெட்டி பெட்டியாய் போய் ‘என்னைக் காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு கேட்டேன். அஞ்சாறு பேர் அரிவாளும், கம்புமாய்க் என்னைக் கொல்ல வராங்கன்னு கையெடுத்துக்கும்பிட்டேன். என்னைப் பார்த்த கண்கள் மூடிற்று. கேட்ட காதுகள் திரும்பிற்று ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/39&oldid=588240" இலிருந்து மீள்விக்கப்பட்டது