உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 35

உள்ளாகி அப்புறம் பினாங்கில் குடியேறியிருக்கிறார். ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேநீர்க் கடை வைத்திருக்கார். கடைக்கு யோகம் அடிக்க அடிக்க ஊரில் இருந்த அவருடைய தங்கைகளுக்கும் யோகமடிச்சுது. மாதா மாதம் பணம் அனுப்பியிருக்கிறார். தெரிந்த ஆட்கள் மூலம் நகை தட்டுகள் அனுப்பியிருக்கார்.

"ஊரில் தாத்தாவின் அப்பா - அதாவது என் கொள்ளுத்தாத்தா குடிகாரத்தனத்தையும் ஓரளவு திருத்தி மகன் அனுப்பிய பணத்தில் இழந்துபோன சொத்துக்களையும் மீட்டார். இரண்டு மகள்களுக்குத் திருமணமும் செய்துவிட்டார். கடைசி மகளோட கல்யாணத்திற்கு என் தாத்தாவும் போயிருக்கார். அங்கே அவருக்கும் கால்கட்டுப் போட நினைத்திருக்கிறார்கள். தாத்தாவோ பினாங்கிலே ஒரு மலேயப் பெண்ணை நேசித்திருக்கிறார். அவளையே திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டிருக்கார்"

ஆனால், ஊரில் அவரோட அப்பாவும் தங்கைகளும் பிடிவாதமாய் அவரைத் திருமணம் செய்ய நிர்ப்பந்தம் செய்தார் களாம். சொந்தம் அறுபட்டுப் போகக்கூடாது என்பதற்காகவும் தாத்தா சொந்தத் தாய்மாமன் மகளைக் கட்டினார். அப்படிக் கட்ட வில்லையானால் அவளோட அண்ணனுக்குக் கட்டிக் கொடுத்த அவரோ ட த ங் கையோட எதிர் காலத் தி ற்கு அபாயம் ஏற்பட்டிருக்குமாம். எப்படியோ கல்யாணம் முடிந்து, கட்டுன மனைவியோட மலேயாவிற்கு வந்தார். பாவம். தாத்தாவின் காதலியான அந்த மலேயாப்பாட்டி, சாகிறது வரைக்கும் எங்களை வாஞ்சையோடுதான் பார்ப்பாள். நம் தமிழர்கள் பலருக்குக் கெட்ட பேர் வந்ததுக்கு "வாழ்கிற இடத்துல காதல். பிறந்த இடத்துல கல்யாணம்" என்று நடந்து கொண்டதுதான் காரணம்."

"எப்படி இருந்தாலும் தாத்தா மனைவியோடு சந்தோஷமாய் தான் வாழ்ந்தார். அதோடு பாட்டி, மனைவிக்கு-மனைவி சொந்தத்துக்குச் சொந்தம் என்கிறதால பிரச்சினை ஏதும் இல்லை. அதோடு அந்த மலேயப் பாட்டியும் தாத்தாவும் தொட்டதில்லை. கெட்டதில்லை. அவளும் கடைசிவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒதுங்கிக் கொண்டாள். கிராமத்துப் பொண்டாட்டி வந்த நேரமோ என்னவோ தாத்தாவோட தேநீர்க்கடை ஹோட்டலாயிட்டு. கிராமத்தில் தங்கைகளுக்கும் மைத்துனர்களுக்கும் தாத்தா எவ்வளவோ செய்தார். அவரோட கங்கை பெண்கள் போட்டதெல்லாம் மலேயா நகைகள்தான். உடுத்துனதும் அந்த நாட்டு உடைகள்தான். அந்தக் கிராமத்திலேயே எங்க தாத்தா உபகாரத்தில் முதல் தடவையா சைக்கிள் ஒட்டியது எங்க பாட்டியோட குடும்பம். அதனாலேயே அவங்க குடும்பத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/48&oldid=588269" இலிருந்து மீள்விக்கப்பட்டது