உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கிறான் என்பதை வாசகர்களே உணர்வார்கள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை கொடுத்த, கோவை ஞானி அவர்களை நினைத்தால், வள்ளலார் அருளிய,“தோலெலாங் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும், மேலெலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட”, என்ற திருவருட்பாவின் கவித்துவ வரிகள் நினைவுக்கு வந்து, எங்களை ஊனுருக வைக்கிறது.

முன்னுரையின் அவசரத்தை உணர்ந்து, கண்கள், கரங்களின் இயக்கத்தைச் சரி பார்க்க முடியாத சூழலிலும், சிந்தனை வீச்சு மட்டுமே கரங்களை இயக்க, அரியதொரு அணிந்துரையை எழுதி அனுப்பிய சீரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள், இந்த பதிப்பகத்தின் நிரந்தரமான நன்றிக்கு உரியவர். ஒரு வாரத்திற்கு உட்பட்ட கால அவகாசத்தில், மெய் வருத்தம் பாராது, அத்தனை கதைகளையும் படிக்கச் சொல்லி, கேட்டு, உடனடியாக தேவைப் படுகிற காரணத்தால், எழுத்துக்களை அனுமானத்தின் பேரில் ஆக்கி, அதை அனுப்பிய அவரது சகோதரத் தோழமைக்குத் தலை வணங்குகிறோம்.

இந்தத் தொகுப்பிற்கு அழகான, அட்டை படம் ஆக்கித் தந்ததுடன், அரிய யோசனைகளை தந்துதவிய தோழர் இளவேனில், இந்தத் தொகுப்பை, மின் அச்சு செய்து கொடுத்த தாமரை நிர்வாகத்திற்கும், குறிப்பாக தோழர் ஏ.எம்.கோபு அவர்களுக்கும், அவருடன் பணியாற்றும் தோழர்கள் கருத்திருமன், தனசேகரன் ஆகியோருக்கும் எங்கள் நன்றி உரித்தாகும். இவற்றை சரி பார்த்து செப்பனிட்ட, இந்திய அரசின் செய்தி விளம்பர அலுவலரும், இலக்கியத்தில் புலமை மிக்கவருமான நண்பர் தனசேகரன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.

இந்தத் தொகுப்பு பற்றி, வாசகப் பெருமக்கள் ஒரு வரி எழுதிப் போட்டால், நன்றியுடையோம்.

ஏகலைவன் பதிப்பகம்,
9—இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர்,
சென்னை- 600 041.
: 4917594