உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாடா மல்லி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv

எவருக்கும் ஏற்படவில்லை. இதுதான் இன்றைய நடைமுறை. இது மாறும் என்று நம்புவோமாக.

‘ஆனந்தவிகடனில், இது தொடர்கதையாக வந்த போதும், பின்னர் இது நூலாக வடிவம் எடுத்தபோதும் அருமையான படம் வரைந்த ஒவியர் அரஸ் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாவலை இந்தியா டுடேயில் விமர்சித்த பேராசிரியர் சு. வேங்கட்ராமன், சுபமங்களாவில், விமர்சித்த கோபாலி, எனது தோழர்களான செம்மலர், தாமரை, தீக்கதிர் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன். இந்த நாவலை அச்சுப்பிழை திருத்துவதிலிருந்து இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுதவேண்டுமென்று என்னை வற்புறுத்தியவரும், இந்த நாவலோடு இரண்டறக் கலந்த என் தேசியத் தோழர் தர்மலிங்கம் அவர்களுக்கும், இந்த நூல் சிறப்பாக வெளிவரத் துணை நின்ற பெரியவர் திருநாவுக்கரசு அவர்களின் திருமகன்களான ராமு, சோமு ஆகியோருக்கும் செலுத்தவேண்டிய நன்றிக்கடன் என்னிடம் அதிகமாகவே உள்ளது. இதற்கு முன்னுரை எழுதிய விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன், ஆய்வுரை எழுதிய டாக்டர் இராமகுருநாதன், இந்த நாவலை விமர்சித்து கடிதங்கள் எழுதிய எராளமான வாசகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் என் நன்றி உரித்தாகுக... இந்தப் படைப்பை பாலக்காடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக்கக் காரணமான அந்தப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ராசாராம் அவர்களுக்கும் நன்றியுடையேன். இந்த நாவலுக்கு ஆய்வு நிகழ்ச்சி வைத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வடசென்னைக் கிளைத் தோழர்களையும், கோவை மாவட்டத்தில் இதற்கு ஆய்வரங்கம் நடத்திய சக எழுத்தாளர் தோழர் சுப்ரபாரதி மணியனுக்கும், அந்த அரங்கில் ஆய்வுக்கட்டுரை படித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/16&oldid=1248943" இலிருந்து மீள்விக்கப்பட்டது