பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை


‘பாரத மணித்திரு நாடு’ என்று நவயுகத்தின் கவிஞர் பாரதியார் பெருமையுடனும் உவப்புடனும் ஏற்றித் தொழுத நம் பாரதம் பழமைப் பண்புகளிலும் வரலாற்றுச் சிறப்புகளிலும் புகழ் மிக்கோங்கி யிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அநாதி காலந்தொட்டு வழங்கிவரும் மறைகளும், காவியங்களும், இலக்கியங்களும் பாரதத்தின் பெருமைகளை அன்றைய நிலையிலும் இன்றைய நிலையிலும் பறை முழக்கி ஒலித்துக்கொண்டே யிருக்கின்றன. புத்தர், மகாவீரர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற ஆத்ம ஞானிகளும், அந்தரங்கசுத்தி படைத்த நெறியாளர்களும் தோன்றித் துலங்கிய புனித நாடு இது. சரித்திரங்கள் சிறப்பித்துக் கூறும் அரச சக்கர வர்த்திகள் வடநாட்டிலும் தென்னட்டிலும் நிறைந்திருந்து நேரிய ஆட்சி புரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

காலம் எத்தனையோ மாறுதல்களைச் செய்ததற் கிணங்க நம் நாடு இத்தனை சிறப்புகளுக்குப் பிறகும் அந்நியரிடம் சில காலம் அடிமைப்பட்டிருந்தது. அடிமையகற்றி, சுதந்திரம் பெற நமக்கு வழி காண்பிப்பதற்கு இருளில் ஒரு ஒளிபோல் கருணாமூர்த்தியான காந்திஜி தோன்றினர். புரட்சிகளிலேயே ஒரு புரட்சி போல் அவரது ஆத்ம சக்தியின் துணை கொண்டு கத்தியின்றி இரத்தமின்றி - அறப்போரெனும், புரட்சி செய்து, நம் நாட்டை மீட்டு அடிமை எனும் நிலையை ஒழித்தோம். சாதி-சமய வேறுபாடின்றி ஒரே மக்கட் குலம் என்ற பெருமையோடு ஜனநாயக முறையில்