பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முதலில் குவெட்டாவிலிருந்த இவர், தமது படையுடன் 3,000 மைல் கடந்து சென்று, பர்மாவின் தலைநகரான ரங்கூன் போராட்டத்தில் கலந்துகொண்டு, பெரும் புகழ் பெற்றார். பின்னர் இந்தோ-சைன, ஜாவா, மலாய் முதலிய இடங்களுக்கும் சென்றிருந்தார். தாயகம் சுதந்தரம் பெற்றபின், ஹைதராபாத்தின் கொட்டத்தை அடக்க இவர் தலைமையில் தான் இந்தியப்படை சென்றது. ஹைதராபாத்தில் இராணுவக் கவர்னராகவும், சேனையின் தலைமைக் காரியாலயத்தில் தலைமை அதிகாரியாயும் இருந்து விட்டு, 1956-ல் சீனவுக்குச் சென்ற இந்திய இராணுவக் குழுவுக்கு இவர் தலைவராகவும் இருந்தார்.

தமிழ் நாடு முதல் அஸ்ஸாம் வரை எல்லா ராஜ்யங்களிலும் சீன அனுதாபமுள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்பெற்ற கம்யூனிஸ்டுகள் சிறைவைக்கப் பெற்றார்கள். இந்தியாவில் தங்கியிருந்த சீனரில் பலரும் காவலில் வைக்கப்பெற்றனர்.

அமெரிக்காவிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் இந்திய இராணுவத் தேவைகளை நேரில் அறிந்து செல்வதற்காக இரண்டு முக்கியமான பெருங்குழுக்கள் வந்திருந்தன. அமெரிக்கக் குழுவுக்குத் திரு. ஹாரிமன் னும், பிரிட்டிஷ் குழுவுக்குத் திரு. ஜான் டில்னேயும் தலைமை வகித்திருந்தனர். இரண்டு குழுக்களின் அங்கத்தினர்களும் இந்திய மந்திரிகளையும், சேனாபதி முதலியோரையும் கண்டு பேசியதுடன், போர் நிகழ்ந்த இடங்களையும் பார்வையிட்டுச் சென்றனர். முக்கியமான ஆப்பிரிக்க, ஆசிய நாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்தியாவின் நோக்கங்கள் பற்றி விளக்கிச் சொல்ல நம் மந்திரி திருமதி லக்ஷ்மி மேனனும், அதிகாரிகளும் சென்றிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாகிஸ்தானுக்

109