பக்கம்:நேசம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60லா. ச. ராமாமிர்தம்


'-நீங்கள் மாற்றிப் போன பிறகு கூட ரொம்ப நாள் அதே வீட்டில்தான் குடியிருந்தோம். நீங்கள் இருந்த இடத்தில் யார் யார் வந்தார்கள்; இருந்தார்கள்; போனார் கள். நாங்கள் அதிகம் சகவாசம் வெச்சுக்கல்லே. இந்தப் பிடிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் டோய் சுமார் இரண்டு வருஷமாகியிருக்கும். ஒரு நகை வாங்கினேன். அதிலிருந்துதான் ஆரம்பம் எனக்குச் சனி. அவளுக்கு யமன், கண் அவிஞ்ச பிறகு, வழக்கப்பிரகாரம் எல்லாம் தெரிஞ்சவா, தங்கள் தெரிஞ்சதனத்தைக் காட்டிண்டா. அதுபோல நகையெல்லாம், மலிவா வரதேன்னு, முன் பின் விசாரிக்காமல் வாங்கக்கூடாது. அந்தப் பையனை எனக்குத் தெரியும். உதவாக்கரைதான். ஆனால் ஜமீன் வீட்டுப் பிள்ளை, லேசா ராஜ ரத்தம் கூட. அது மாதிரி பரம்பரை சொத்தில் குடும்ப சாபம் எங்கேனும் கலந்திருக் கும் ஆனால், அப்படி யாரேனும் வாங்கும்போது தடுத்திருந் தாலும் நான் கேட்டிருக்கமாட்டேன். மலிவா வந்தது. பாங்கில் வெச்சிருந்தான்-வீட்டில் இருந்து திருடியோ, அடித்துப் பிடுங்கியோ. சுருக்க மீட்டுவிடலாம்னு எண்ணி யிருப்பான். ஆனால் மீறிப்போச்சு. வெச்சயின் மீட்பதாவது: ஏலத்துக்கு விட்டால் பேர் கொல்’ ஆகிவிடும். அவனே விற்பதாக அவனிடம் எழுதி வாங்கிக்கொண்டு, பாங்க் நகையை விற்றுவிட்டது. அதற்கு அசலும் வட்டியும் செலவும் போக, மிஞ்சியது 200, 300 என்னிடமிருந்து அவனுக்குக் கைமாறியதும் அங்கிருந்தே கிண்டிக்கு டாக்ஸி பிடிச்சுட் டான். மைனர் அவசரமே தனிதான். எட்டு பவுன், ரெட்டைவடம் கோதுமைச் சங்கிலி. கலியாணமாகிப் பத்து வருஷத்துக்குப்பின், மங்களத்துக்கு நான் சொந்தமாக வாங்கும் முதல் பரிசு. அதுவரை எங்கேசாண் ஏறினால்-பழமொழி பழசுதான். ஆனால் மாற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/66&oldid=1403496" இலிருந்து மீள்விக்கப்பட்டது