உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சீனத்தின் குரல்


ஏற்றுக் கொண்டு பிரசவ காலத்தில் கருணைக் கண்ணீர் சொரிந்த தாயுள்ளமாயிற்றே. தான் விரும்பியதை உண்ணமுடியாமல், எனினும் அதனால் குறைபடாமல், எப்படியும் குழந்தை சுகமாக இருந்தால் போதும் என்று தன் சுகங்கள் எல்லாவற்றையும், தியாகம் செய்த தாயின் கருணையை விரிந்த கடல் பரந்தவான் எவற்றிற்கும் அளவிட முடியாததாயிற்றே. உலகம் என்பால் பொய்' என ஓடுபவனைனயம் ஒரு கணம் நிற்கச் செய்யும் ஆற்றலுடையதாயிற்றே தாயுள்ளம். எதிரிகளாலும் தடுக்க முடியாத வாளை தன் வாய் சொல்லால் தடுக்கும் அன்னையின் குன்றா யிற்றே தாய் மனம். தாய்க்கு ஒரு சமாதி கட்ட வேண்டுமென்று நினைக்கும் சுதந்திரத்தில் சீனத்தின் சட்டம் அனாவசியமாகக் குறுக்கிடுகிறது.

இதே சட்டத்தைக் காட்டியவள் தாய், ஆகையால் தாய் முந்தி, சட்டங்கள் பிந்தி, ஆகவே சட்டங்களுக்குப் பணியமாட்டேன். "கீழ்ப்படிதலான எண்ணம் எனக்கொன்றிருக்குமானால் அதில் என் தாய்க்கே முதலிடம் அளிப்பேன்” என்று சமாதியைக் கட்டி முடித்துவிட்டு, லூ என்ற மாகாணத்திற்குச் சென்றுவிட்டார்.

சந்திப்பு

லூ மாகாணத்திற்குச் சென்ற கன்பூஷியஸ். அங்கே இருந்த நூல் நிலையத்தில் இசைக் கலையைப் பற்றி நிறைய படிக்கத் தொடங்கினார், அங்கு