மங்களத்தின் நம்பிக்கை 115
இருந்தாஅம் இருக்கட்டும்' என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான்். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அமுைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களே ஏற்படுத்திக்கொண்டான். சுருக்கமாகவும் நிதான்மாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்றுவிடுவாள்.
அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலேயில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக் கும்போது சந்துருவும் அங்கிருந்தான்். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், “சுரீர்" என்று குத்தவே முத்துப்போல், அந்த இடத்தில் "செக்கது. செவேல்' என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள்.
'த்ஸொ...த்ஸொ... முள் குத்திவிட்டதுபோல் இருக் கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?' என்று கவலை யுடன் விசாரித்தான்் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. 'இல்லை....ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்' என்ருள் ஸரஸ்வதி, மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த் துக்கொண் டிருந்தான்் சந்துரு. ஸரஸ்வதி "சர சர வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுபடியும் அன்று மாலேயே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக்கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவ தற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணேயை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
'ஷண்முகப் பிரியா ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின்போது வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி' என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.
உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து ஷண்முகப் பிரியா வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன்