உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2©

தாய்க்குப் பிறகு தாரம்

திபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத் தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண் டிருந்தான்் ரகுபதி. 'கடிதம் யார் எழுதி இருக்கிரு.ர்கள்? என்ன எழுதப்பட் டிருக் கிறது?’ என்று அறிந்துகொள்ள ஸரஸ்வதி யும், ஸ்வர்ணமும் ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.

'கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓடவேண்டியதுதான்் பாக்கி!' என்று வெறுப் புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜை மீது வீசி எறிந்துவிட்டு விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, 'அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?' என்று கேட்டாள்.

'இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான்் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்" என்ருள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையி லிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:

அன்புள்ள ரகுபதிக்கு,

அநேக ஆசீர் வாதம். நீயும். உன் அம்மாவும். செள. ஸரஸ்வதியும் செளக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்துகொண் டிருக் கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிருேம்.

செள. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகை களில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களே யும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக்