142 இருளும் ஒளியும்
தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் 'பளபள வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், 'அவர்கள் வீட்டில் தலைதீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னேக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள்தான்் தீபாவளிக்கு ஊருக்குப் போகா மலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர் களே! போங்கள் அத்தான்்! சாவித்திரி மன்னி உங்களே எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?' என்று கேட்டாள் தங்கம்.
ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாக வும் இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனே லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே. வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.
- ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த் கல்யாணந்தான்் இவ்வளவு அழகாக இருக்கிறதே. அவள் ஒயாமல் தர்மத்தைப்பற்றியும். நியாயத்தைப்பற்றியுந்தான்் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தால் வாழ்க் கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்்! சர்க்கரை" என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? சாவித்திரி, சாவித்திரி' என்று ஜபித்துக்கொண் டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்்! என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.
பொழுது நன்ருக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஒர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிருள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிருன் கணவன். தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி "கமகம"வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும்.