உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்ளின் வேகனே 109

விளக்கை அனைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச் சத்தில், அதற்குமேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் பொத் தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.

மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணுந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான்் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும்

போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான்். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்தி ருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின்

கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண் டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்ருக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. "ஆமாம்.. ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான்் இருக்கிருள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிரு.ர்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிருள்? அன்று மாலே கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட் டென்று அவளிடம் நடந்துகொண்டதை பரஸ்வதியிடம் வெளி யிடுகிருளோ? பொழுது விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு, அவளிடம் எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!’ என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான்். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிர விலும் "கலீ'ரென்று சிரித்தாள்.

போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிருள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?" என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். 'நல்லவேளை! கதை பேசிக்கொள்கிரு.ர்களா? என்னவோ என்று பயந்துபோனேனே' என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டே அறைக்குள் சென்ருன். E.

இரவு துரங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து துாங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது, பொழுது நன்ருக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி,