பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வ.கோ. சண்முகம்


அலெக்ஸாண்டர் வெற்றித் தோளின் அகங்காரம் கசங்கா நேரம் ! சலிக்காத விளையாட் ட்ாக தர்மத்தை நசுக்கிப் போட்டே அலைக்கூட்டம் போன்ற படைகள் அவன்குரலின் ஆணை ஏந்த உலைக்கூடம் நெருப்பாய் உறுமி பாரதத்தை உலுக்கும் வேளை மண்ணாசை வெறிபி டித்து மாவையம் தனையே விழுங்கக் கண்ணோட்டம் விட்டு ரத்தக் கதிரவனை கருக்கல் தோறும் பண்பாடி வரவேற் றுத்தன் பராக்கிரம ருசியில் திளைத்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டருக் குள் குரூரமாம் ஆசை ஒன்று! தளவாடக் கொடுமை யாலே தன்னிரு கால்க ளுக்குள் அளவற்ற வீரர் தம்மை ; பாரத ஆன்றோர் தம்மைக் குளமான விழிகளோடே குவியவே செய்து விட்டான்! இளகாத இரும்புத் து ணும் அருகம்புல்லாய் லாயிற் றவனால்!