மெழுகுச் சிறகுகள் வீதியிலே சந்தடிதான் தடித்துக் கூச்சல் விம்மல்கள் அலறல்கள் பெருகப் பெருக ஏதேதோ தடுமாற்றம் ! ஐயம் அச்சம் ! எல்லாமே அவள் நினைக் குடையலாச்சு ! சோதனையின் கடைசி நாள் இதய புரத்தின் சுவாசத்தை அவள் நுகரும் கடைசி நேரம் ! மீதியுள நாழிகையில் 'அது' நடந்தாக வேண்டியதே தவிர்ப்பதற்கோ, வழியும் இல்லை ! நொண்டிச்சி-அவள்தோழி வாழ்வுத் தடத்தின் நொடிப்புகளில் வீழ்ந்துழன்ற பேதை ஆனால் சண்டாளன், மாபாவி சண்டைக் காரன் சாட்டியடி வாங்காமல் ரோசத் தோடு 'நண்டுக்கால் தீவு'க்கே ஒடிப்போக நல்முடிவு செய்துவிட்டாள்! தன்கண வனையே குண்டாகத் தூக்கித்தன் முதுகில் சுமந்தே கோட்டை மதில் தாண்டுகிறாள்! வியப்பு: நகைப்பு! குத்தவைத்தக் குதிரைக்கால் லாடம் போலக் குப்புறவே தொங்கு நரை மீசை துள்ளக் கொத்துகின்ற கழுகுக்கண் சிவக்க, மதுவைக் குடித்தபடி மணிக்குமணி புதுசு புதுசாய்ப் 'பத்தினிகள்' மாற்றியபடி படுத்து ருண்டே பதர்நெஞ்சன் மதாங்கனாம் சர்வா திகாரி, சத்தியத்தைக் கல்லறைக்குள் தள்ளு கின்றச் சட்டங்கள் போட்டிட்டே கொக்க ரித்தான் !
பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/17
Appearance