உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜீவா தீட்டிய
எழுத்து ஓவியங்கள்‌

உயிரோவியம்‌

இதுகாறும்‌ தமிழன்னையின் திருமேனியிலேயே கிடையாத ஒரு எழில்‌ வாய்ந்த ஆபரணம் என்றும்‌, இதுவரை எந்த கதாசிரியராலும்‌ காணாத முடிவு என்றும்‌, பல முறை படித்து இன்புற வேண்டிய கதை என்றும்‌ அறிஞர்கள்‌ இக்கதையின் சிறப்பைப் பாராட்டியிருக்கிறார்கள்‌. விலை‌ ௹. 1-8-0

யான்‌ ஏன்‌ பெண்ணாய்ப்‌ பிறந்தேன்‌?

இக்கதையில்‌ வரும்‌ கதாநாயகி காமாட்சியின்‌ சித்திரம்‌ தமிழ்ச் சமூகத்தில் நிலவி வரும்‌ வைதவ்யத்தின்‌ சித்திரமாகும்‌. விலை‌ ௹. 2-0-0

தாசி ரமணி

இந்த நவீனத்தை வாசிப்பவர்கள்‌ உள்ளத்தில்‌, சமூகச்‌ சீர்‌கேட்டுக்கு வித்தாகவுள்ள தேவதாசி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும்‌ என்ற உணர்ச்சியை உண்டாக்கும்‌. கதைப் போக்கு அவ்வளவு ருசிகரமாக இருக்கிறது. விலை‌ ௹. 1-8-0

காதலனா? காதகனா?

கலாசாலை மகளிர்‌ சிலரின்‌ சீர்கெட்ட வாழ்க்கையும்‌, போலி நவ நாகரிகத்துக்கு அவர்கள்‌ பலியாகும்‌ கதியும்‌ இதில்‌ படம் பிடித்துக்‌ காட்டப்பட்‌டிருக்கிறது. விலை‌ ௹. 1-4-0

சீமாட்டி கார்த்தியாயினி

லியோ டால்ஸ்டாய் எழுதிய “அன்னா காரினென்னா”வை ஜீவா வெகு அழகாகத்‌ தமிழ்ப்படுத்தியிருக்கிறார்‌. விலை‌ அணா 14


ஆனந்த போதினி காரியாலயம்‌,
தபால்‌ பெட்டி நெ.167, சென்னை-1.