உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வீரச்சிறுமி கடல்நீர் முகந்து காருடல் கறுத்துப் படர்ந்து தேங்கிய பனிமலைச் சாரல் இடுக்கிடைப் பூத்த காந்தள் எழில்மலர் அடுக்களே வாடா அகல்விளக் காகும்! கற்று முதிர்ந்தோர் யாத்த காவியம் முற்றிய தேன்.இருல் வான்முழு மதியம் ! கணுக்கழை ஏறிக் கடுவன் மந்தியின் பிணக்கைத் தீர்க்கப் பேசிக் கொஞ்சி விரிவுரை யாளர் விளக்கும் கவிபோல் உரித்துப் பலாச்சுளை ஊட்டி மகிழும் குன்றும், குன்றுசூழ் ஊரும் முன்ள்ை ஒன்றிய அவ்வூர் மக்களின் உடைமை ! வயலெலாம் செந்நெல், வரப்பெலாம் தென்னே, அயலெலாம் வாழை, அருகெலாம் கரும்பு, பழுத்தமாந் தோப்பு, பலகறித் தோட்டம், கழுத்து நிலைக்காக் கால்நீர் ஓட்டம், மயிலாடு பாறை, மலராடு பொய்கை, குயில்பாட நானும் குலப்பெண்டீர் முன்றில், எழுத்தறி சாலை, இசைபயில் சாலை, கொழுத்த காளையின் கொம்பொடி மன்றம், 43