பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

77


பிரஞ்சு முடியாட்சியின் பாரம்பரியத்தையும், மூலங்களையும் அலசி ஆராய்ந்ததற்காக ஃபரேரட் (Freret) என்பவர் பாஸ்டிலியில் தள்ளப்பட்டார். 1757ல் இயற்றப்பட்ட ஒரு சட்டம், மதத்தைத் தாக்கும் எழுத்தாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மரண தண்டனை தவிர வேறு தண்டனையில்லை என்று அறிவித்தது. சகல கருணையோடு இயற்றியது அது!

“பரமண்டலத்திலுள்ள பரமபிதாவே, என்ன செய்கிறோம் என்று தெரியாமலே செய்துவிட்டான், என்னைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸ். அவனை எனக்காக மன்னித்தருளும்” என்று கேட்டுக்கொண்ட இயேசுபிரானின் நேரடியான வாரிசுகள் என்று சொல்லிக்கொண்ட குருமார்களின் செய்கைகள் இவை. அவரால் எழுதப்பட்ட நாடகங்கள், புதினங்கள், கட்டுரைகள், 99 பெரிய புத்தகங்களாக தொகுக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாக் கண்டத்தில் பெரிய மனிதர்கள், விஞ்ஞானிகள், அரசியல் மேதைகள், அரசர்கள், அரசியர்கள் பலருடன் கடிதப் போக்குவரத்து இடைவிடாமல் நடத்திய வண்ணமிருந்தார். அவர் இங்கிலாந்தில் இருந்த போதுதான் விஞ்ஞான மேதை நியூட்டன் இறந்துவிட்டார். அந்தச் சவ ஊர்வலத்தில் வால்டேர் கலந்துகொண்டார்.

அங்கே அடிக்கடி விவாதங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றுள் முடிவு காண முடியாத சிக்கலான கேள்வி ஒன்று. அதாவது, “மனிதருக்குள்ளே மிகப் பெரியவர் யார்?” நியூட்டனா, சீசரா, அ.ெலக்சாண்டரா, தைமூரா, கிராம்வெல்லா? இதுதான் கேள்வி. “ஐயமே வேண்டாம்; மனிதருள் மிகப்பெரியவர் சர் ஐசக் நியூட்டன்தான்” என்று பதில் கிடைத்தது.

சரி. இவ்வளவு எழுதிமுடித்த அவருடைய ஒட்டுமொத்தமான கருத்துக்கள் எவை? சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

“நீ சொல்லக் கூடிய ஒவ்வொரு வார்த்தையினின்றும் நான் வேறுபடுகிறேன். ஆனால் அதைச் சொல்வதற்கு உனக்கு இருக்கக் கூடிய உரிமையை என் கடைசி மூச்சுவரை காத்துக்