பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தார்கள். இப்படையெடுப்பில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர் களும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டார்கள். பாளையங் களில் வாழ்ந்த மக்களும் போர்களால் அவதியுற்றனர். போருக்கு வேண்டிய உணவுப் பொருட்களைப் பாளையக்காரர்கள் மக்களிடம் பறித்துச் சென்றனர். விளைந்திருக்கும் பயிர்கள் அறுவடையாகு முன் அவற்றைப் பாளையக்காரர்கள் தாங்களே அறுவடை செய்து கொண்டு சென்றனர். தங்கள் பாளைய எல்லைக்குள் மட்டுமில்லா மல் வெளியிலும் பாளையப்பட்டார் இவ்வாறு கொள்ளையடிப்பது சகஜம். இக்குழப்பமான நிலையில்தான் ஆங்கிலேயர்கள் ஆற்காட்டு நவாபிடமிருந்து வரிவசூல் குத்தகை உரிமையைப் பெற்றனர். நாயக்கர் காலத்தில் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்த பாளையக்காரர்கள் தங்கள் நலன் பாதிக்கப்பட்டதை எண்ணி இம் முறையை எதிர்த்தனர். தென் மண்டலத்தில் பதினெட்டாம் நூற்ருண்டின் மத்தியில் பெரும்பாலான பாளையப்பட்டுகள் ஆங்கிலேயர்களை எதிர்த்தன. நெல்லை ஜில்லாவில் கீழ்பகுதியில் எட்டையபுரத்தாரும், பாஞ்சாலங்குறிச்சியாரும், ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையப்பட்டாருக்குத் தலைமை தாங்கினர். மேல்பகுதி யில் நெல்காட்டான் செவல் பூலுத்தேவர் மேற்பகுதிப் பாளையப் பட்டாருக்குத் தலைமை தாங்கினர். ஆளுல் இவர்கள் தங்களுக் குள் இருந்த போட்டி காரணமாக ஆங்கிலேயர்களை ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதில்லை. ஒவ்வொரு பாளையக்காரரும், தம்முடைய பாளையத்தை வலுவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். ஒருவரையொருவர் நம்பாமல் ஒற்றுமை குறைந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய சிறந்த ஆயுத வலிமை காரணமாகப் பல பாளையப்பட்டார்களைத் தோற்கடித்து விட்டனர். பாளையக்காரர்களுடைய நோக்கம் தங்கள் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதுதான். ஆகையால் பதவி நிலைத்தால் வெள்ளையரோடு சமாதானம் செய்து கொள்ளு வதற்குத் தயாராக இருந்தனர். இவ்வாறு இராமநாதபுரம், எட்டையபுரம் முதலிய பாளைப் பட்டுகள் வெள்ளையரோடு சமாதானம் செய்துகொண்டன. இதற்கு முக்கிய காரணம் மக்கள் இப்போராட்டங்களில் எவ்விதப் பங்கும் கொள்ளாமல் இருந்ததுதான். பாளையப்பட்டாராலும், முடியவில்லை. - * * ニー・ベ- 、 – →ー ,'・ பொம்மு தனது போராட்டத்