38
தமிழ் இனம்
(தெய்வம்-முனிவர்) இங்கு ஏற்புடைத்தாதல் ஆராய்ந்து தெளியற்பாலது.
“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்னும் திருக்குறளில் வரும் ‘தெய்வம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் யாதாயிருத்தல் கூடும்? இதனைச் சிறிது ஆராய்வோம்.
தெய்வம்-பிறதெய்வம் என்று பரிமேழலகரும், ‘குலதேவதை’ என்று பரிதியாரும், வேறொரு கடவுள் என்று காலிங்கரும் பொருள் கொண்டனர். இம்மூவர் உரையில் வந்துள்ள தெய்வம், கடவுள் என்ற சொற்களுக்கு முனிவர் என்ற பொருள் உண்டு என்பது முன்னரே கூறப்பட்டது. ஆண்களைப்போலவே பெண்களும் முழுமுதற் கடவுளைத் தொழுதல் பண்டை இலக்கியங்களில் காணப்பட்டதோர் உண்மை. அங்ஙனம் கடவுளை வணங்கும் பெண்கள் கணவரை மதியாதிருந்தனர் என்று கொள்ளுதல் இயலுமா? பிற கடவுளரை மதியாது கணவனையே மதிப்பவள் என்று பொருள்கொண்டால், இப்பொருள் எவ்வாறு சிறக்குமென்பது விளங்கவில்லை.
சில பெண்கள் தம் சமயத்தைச் சேர்ந்த துறவிகளை மிகவும் பாராட்டி அவர்க்கு அளவுக்கு மேற்பட்ட தொண்டுகளைச் செய்தல் இக்காலத்தில் நாம் காண்கின்றாேம். கணவர் காலை பத்துமணியளவில் அலுவலகம் சென்ற பின்பும், அவர் மீண்டு மாலையில் மனைக்குத் திரும்பும் முன்பும் தம்மால் மதிக்கப்படும் துறவிகளிருக்கும் மடத்திற்குச் சென்று பொழுது போக்கிவிட்டு மாலையில் வீடு