பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

143


களும்—கவிமணியின் நாளைக் கொண்டாடி அவருக்கு அஞ்சலி செய்கின்றன. ஆம்! அவர்தம் கவிகள் ஈடும் எடுப்புமற்ற மேதக்க கவிகள். அவரைப் பற்றியும் அவர் தம் பாடல்கள் பற்றியும் நீங்கள் முன்னமே நன்கு அறிந்துள்ளீர்கள். இதோ இந்த மண்டபத்திலேயே அவரைப் பற்றிய பேச்சுகளும், அவர் கவிதை பற்றிய விமரிசனங்களும் நன்கு நடைபெற்றன என்று அறிகின்றேன். ஆகவே அவரைப்பற்றி நான் அதிகமாகக் கூறவேண்டுவதில்லை. என்றாலும், பாரதியாருக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுக்கெல்லாம் கவிஞராய், பாட்டிலும் சொல்லிலும் செயலிலும் தூயராய் வாழ்ந்த அவரைப் பற்றி நான் இன்று பேசவில்லையானால், எடுத்த பொருளே முற்றுப் பெறவில்லை என்னலாம். ஆகவே, அவர்தம் பாடல் வழிப் புகுந்து ஒரு சில கருத்துக்களை உங்கள் முன் வைத்துப் பின் மேலே செல்கின்றேன்.

கவிமணியின் கவிதைகள் சிறந்தன என்பதற்குச் சான்று அவற்றுள் சில கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதேயாகும். சாதாரண வகுப்புக்களுக்கு மட்டுமேயன்றி, தமிழைத் தனிப்பாடமாகக் கற்றுத் தேர்ச்சி பெற விரும்பும் சிறப்பு வகுப்பு (B.A. Hons.) மாணவர்களுக்கும் அவரது ‘ஆசிய சோதி’ பாடமாய் அமைந்துள்ளது எனின், அவர்தம் கவிதையின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? சாதாரண ஆரம்பப் பள்ளிக்கூட வகுப்பு மாணவர் முதல் கல்லூரி இறுதி வகுப்பு மாணவர் வரை அவர் பாடலைப் படித்துப் படித்துப் பயன்பெறுகின்றார்கள். பழங்காலப்புலவர் வரிசையில் வைத்துப் போற்றி எண்ணக்கூடிய அளவிற்கு அவர்தம் புகழ் நாட்டில் நன்கு பரவி விளங்குகின்றது. இயற்கையைப் பற்றியும், இலக்கியம் பற்றியும், கடவுள் நெறி பற்றியும், குழந்தைகள் பற்றியும், உலக வாழ்வு பற்றியும் உலகில் வாழும் மக்கட் சமுதாயம் அமையவேண்டிய நெறியைப் பற்றியும் அவர் பாடியுள்ள திறன் அவா சொல் வழி அனுபவிப்பார்க்கன்றி மற்றவருக்கு எளிதில் விளங்-