உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது. எண்ணெய் எள்ளினது சத்தேயாகும். அது போல இலக்கியத்தில்இருந்து இலக்கணம் எடுக்கப்பட்டது. இலக்கணம் என்பது இலக்கியத்தின் சத்தே ஆகும்.

தன் மொழியில் தேர்ச்சி அடைய ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். தன் மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் வேண்டும். அவ்வாறு பழகினால் ஒவ்வொருவனும் அவனவனது மொழியில் பெருமை பெறலாம். இதைக் கொடுப்பதே இலக்கணமாம்.

“ஒரு மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்பிப்பதே இலக்கணமாம்."

2. இலக்கணத்தின் வகை ஐந்து.

ஒருவன் ஒரு வீடுகட்ட விரும்புகின்றான். அவன் செய்வது யாது? முதன் முதலில் அவன் கல், சுண்ணாம்பு, மணல் முதலியவற்றைச் சேகரிக்கின்றான். அவற்றால் சுவர் எழுப்புகின்றான். அச்சுவர்களை மனையலங்கார விதியின்படி வைக்கின்றான். வீடு கிடைக்கின்றது. அதன்பின் அதை அழகு படுத்துகின்றான். வீடு கட்டுவதில் ஐந்து காரியங்கள் நடைபெறுகின்றன.

அதுபோலவே தமிழ் இலக்கணத்திலும் ஐந்து காரியங்கள் நடைபெறுகின்றன. கல், சுண்ணாம்பு முதலியவற்றைப் போன்று எழுத்துக்கள் இருக்கின்