18
குத்திரம்:
“தத்தம் = பகாப் பதங்களே பகுதி ஆகும்" குறிப்பு: பெயர்ப் பகுபதங்களுக்கும், குறிப்பு வினைப் பக பதங்களுக்கும் பெரும்பான்மை பெயர்ச்சொரி களும், சிறுபான்மை இடைச்சொல் உரிச்சொரி களும் பகுதிகளாம். (உ-ம்) பொன்னன், ஊரன், திருவோணத்தான், பல்லன், கரியன், கூத்தன் என்ற பெயர்ப் பகுபதங் கட்கு முறையே பொருள் முதலிய ஆறுவகைப் பெயரும் பகுதிகளாய் வந்தன.
அவன், எவன், பிறன் என்ற பெயர்ப்பகுபதங் கட்கு இடைச் சொற்கள் பகுதியாய் வந்தன.
கடியன் என்ற பெயர்ப்பகுபதத்திற்கு உரிச் சொல் பகுதியாய் வந்தது.
அறிஞன் என்ற பெயர்ப் பகுபதத்திற்கு வினைச் சொல் பகுதியாய் வந்தது.
பெயர்ப் பகுபதத்திற்கு சிறுபான்மை வினையும் பகுதியாகும்; தெரிநிலை வினைப் பகுபதங்கட்குப் பெரும் பான்மை வினைச் சொற்களும், சிறுபான்மை பெயர்ச் சொல், இடைச் சொல், உரிச் சொற்களும் பகுதிகளாக வரும். -
(உ. ம்) நடந்தான், வந்தான் - வினைச்சொற்கள் பகுதியாய் வந்தன.
கடைக்கணித்தான், காதலித்தான் - பெயர்ச் சொற்கள் பகுதியாய் வந்தன.
- போன்ருன், என்ருன் - இடைச்சொற்கள் பகுதி யாய் வந்தன. -
சான்ருன், கூர்ந்தான் - உரிச்சொற்கள் பகுதி யாய் வந்தன.