உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

முள்வேலிகள்

“உன்னோட நெய்பர் யாரு தெரியுமா?”

“தெரியாது. அந்த வீட்டிலே ஆண்கள் யாரையுமே காணலே. ஒரே அல்லி ராஜ்யமா இருக்குதூங்கிறது மட்டும் தெரியும்.”

“அல்லி ராஜ்யம் மட்டுமில்லே. நான் சொல்லக் கூடாது. நீயே போகப் போக எல்லாம் தெரிஞ்சுக்குவே. ஒரு வயசான கிழவியும் நாலைந்து இளசுகளும்தான். சிவப்பு விளக்குப் பகுதியா இந்த இடத்தையே மாற்றிடப் போறாங்க. கிழவி பலே ஆள்.”

“உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?”

“நல்லாவே தெரியும்,” என்று குறுஞ்சிரிப்போடு கண் களைச் சிமிட்டினான் நண்பன்.

“மாலா-பாலா நாட்டியக் கலைஞர்கள்னு வாசல்லே போர்டு இருக்கா,இல்லியா?”

“இருக்கு.”

“நாட்டியம் மட்டுமில்லே. வேற இரண்டு குட்டிங்க ‘எக்ஸ்ட்ரா’, லயன்லியும் வந்து போவுது.”

“எக்ஸ்ட்ரா லயன்னா?”

“எங்க சினி பிஸினஸ்லே ஆரம்ப முயற்சிகளில் தட்டுத் தடுமாறி நுழையறவங்களுக்கு நாங்க வச்சிருக்கிற தோதான பெயர்.” சொல்லிவிட்டு மறுபடியும் நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் நண்பன்.

கண்ணனின் மனத்தில் பக்கத்துவீட்டைப்பற்றிய முதல் சந்தேகமும் அருவருப்பும் வெறுப்பும் படரத் தொடங்கியது அப்போதுதான். வீட்டில் ஆண்களே இல்லாததும் வெளியி லிருந்து நிறைய ஆண்கள் தேடிவந்து விட்டுப் போவதும் இந்தச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தின.