உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெற்றிக்கண்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3

யும்- அந்தக் கேள்வியை ஒட்டிய உணர்ச்சிப் போராட்ட மும் சுகுணனின் மனத்துள் மூண்டன. திடீரென்று எதையும் சிந்திக்க முடியாத ஒரு நிலை-மேஜை மேல் குவிந்திருந்த எந்த வேலைகளையும்-தொடர்பாகச் செய்ய முடியாத ஒரு பதற்றம் அவனைச் சூழ்ந்தது. தாங்க முடியாத உணர்ச்சி களுடனும் தாபங்களுடனும் அவள் அங்கு வந்து தன்னை எதிர்கொள்ளப் போகிறாள் என்ற எண்ணமும், அவளைத் துணிவுடனும் நிச்சலனமாகவும் தான் எதிர்கொள்வதா, வேண்டாமா என்ற குழப்பமுமாக அந்த விநாடியில் அவன் இருந்தான், அவனைச் சுற்றி அவனுடைய உணர்விலோ, ஞாபகத்திலோ, உறைக்காமல், அந்த மிகப்பெரிய அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் ஒலிப்பதும், ஒய்வதும் மீண்டும் ஒலிப்பதுமாக டெலிபோன் மணிகள், கலீர் கலீரென்று ஊறிச் சிலிர்க்கும் ஊற்றுப்போல் கேட்டுக் கொண்டிருந்தன. வேகமாய் ஆட்கள் அங்கும் இங்கும்ாக மாறி மாறி நடக்கும் காலடி ஓசை ஒருபுறம், பைண்டிங்’ ஆகி வெளியூருக்குப் பார்சல் போகவேண்டிய பத்திரிசைகள் அடுக்கப்படும் ஒசை ஒருபுறம். டயர்ச் சக்கரங்களோடு கூடிய நீள நீளமான கட்டை விண்டிகளில் ரோட் ரோலர் களைப் போல் உருளை உருளை யாக வந்து இறங்கும் நியூஸ்பிரிண்ட் பேல்கள் வண்டிகளிலிருந்து கீழே தள்ளப் பட்டுக் கோடெளனுக்குள் உருட்டி ச் செல்லப்படும் சத்தம் ஒருபுறம் டியும், காப்பியுமாக வந்து காலியானதும் கல கலக்கும் காண்டின் டவர்ா டம்பளர்களின் ஒலி ஒரு புறம். ஆனால் இவை எல்லாம் சுகுணனின் செவிகளில் வழக்கம் என்ற போர்வையினால் மூடப்பட்ட பழைய பழகிய ஞாபகங்களாய் மறந்து போயிருந்தன.

வளைகள் கலின் கலினெனப் பாட மெட்டிகள் கிணுங் கிணுங்கெனத் தாளமிட யாரோ ஒருத்தி அங்கே தன்ன்ைத் தேடிவரப் போவதைப் பற்றியே குமைந்து கொண்டிருந்தது. அவன் ஞாபகம். கடந்த சில நாட்களாக வராமலிருந்து விட்டு இன்றுதான் முதன்முதலாக அலுவலகத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/45&oldid=590411" இலிருந்து மீள்விக்கப்பட்டது