நா. பார்த்தசாரதி 19
சிரத்தை - அசிரத்தை - இரண்டையும் வேகமாகக் கணித்து முடிவு பண்ணுகிற கிராமத்து மனப்பான்மையை அந்த வாட்ச்மேனிடம் கண்டான் சுகுனன். தாசில்தார் வருவதனால் அவன் அங்கு மேலும் தொடர்ந்து தங்கியிருப் பதில் அசிரத்தையும், அவன் மூன்றரை மணி இரயிலுக்குப் போய்விடப்போவது குறித்து அதிக சிரத்தையும் காண் .பித்த அந்த வாட்ச்மேனைப்பற்றிச் சிந்தித்து உள்ளுறச் சிரித்துக் கொண்டான் சுகுணன். கண்ணாடியைச் கழற்றி வைத்துவிட்டுப் பெட்டியைத் திறந்து குளிப்பதற்காகச் சோப்பும் துவாலைத் துண்டும் எடுக்கப்போன போது மேலாகக் கிடந்த துளசியின் சுவியாணப் பத்திரிகை கண்ணில் பட்டது. கைகள் தயங்கின. அதைக் கண்டு மனம் மறுபடி அழத்தொடங்கியது. -
...கட் முகூர்த்தம் நிகழ்வதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் சென்னை ஆபர்ஸ்ட் பரியில் நிகழ்வதால் தாங்கள் தங்கள் பந்துமித் திரர்களுடன் முகூர்த்தத்திற்கும் மாலையில் வரவேற்பிற்கும்...' -
மேலே படிக்க முடியாமல் மனம் கனமாகியது. கைகள் தளர்ந்து சோர்ந்தன. சோர்வோடு சோர்வாக ஒருகணம் முரட்டுத்தனமான பாவனை ஒன்றும் ஏற்பட்டது. இப்படிக் கோழையாக விலகி ஓடிவந்து மறைந்து கொள் ளாமல் எல்லாரையும்போல் அந்தக் கலியானத்திற்குத் தானும் போய்த் துணிச்சலாகத் துளசியையும் அவளுக்குக் கணவனாகிற யாரோ ஒரு எம்.பி.பி. எஸ். டாக்டரையோ, பி. இ. இஞ்சினியரையோ - அந்த மணமகனையும் - பார்த்துக் கலியாணம் விசாரித்துக் குத்தலாக இரண்டு வார்த்தை பேசிவிட்டும் வந்திருந்தால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்றும் ஒரு குரூரமான கற்பனை அவனுள் எழுந்தது. அப்படிச் செய்து அவளை வதைக்காமல் இப்படி ஓடிவந்து தான் ஒளிந்து கொண்டது தவறு என்று அவனுக்கே தோன்றியது. பார்க்கப் போனால் இந்த இரண்டு மூன்று நாளில் அவன் கைகள் பிரமாதமாக ஒன்றும் எழுதிக் கிழித்து விடவில்லை காகிதம் வரை