I 8. நிசப்த சங்கீதம்
லாரியில் ஏறியிருக்கவில்லை, ஊர் சுற்றிப் பார்க்கிறோம்" என்ற உற்சாகத்தில் சிலரும், "வேடிக்கைப் பார்க்கப் போகிறோம் என்ற க்ளிப்பில் சிலரும் இருந்தார்கள். தங்கள் நிரந்தரக் கவலைகளையும், துன்பங்கள்ையும் தற்காலிகமாக மறக்க இந்தப் பயணம் ஒருவேளை அவ களுக்குப் பயன்படலாம். -
வேடிக்கை பார்க்க வந்தவனுக்குச் சத்தியம் புலப் படாது' என்று ஞானரதத்தில் பாரதி எழுதியிருப்பது முத்து ராமலிங்கத்துக்கு நினைவு வந்தது. அரசியல், கலை, இலக்கியம், கல்வி, சமூகம் ஆகிய அத்தனை துறைகளிலும் வேடிக்கை பார்க்க வந்தவர்களே இன்று நிரம்பிக் கிடக்கிறார்களோ என்றுகூடத் தோன்றியது. யாரும் எங்கும் எதையும், அக்கறையோடோ ஆர்வத்துடனோ செய்யவில்லை. வேறு எதையோ செய்ய முடியாத மனத் தாங்கலுடனும் குறையுடனுமே இதைச் செய்து கொண்டி ருப்பது போன்ற செயல் தயக்கம் எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் எல்லாரிடமும் தெளிவாகத் தெரிந்தது. அந்த லாரிப் பயணக் கூட்டத்திலும் அது
தெரிந்தது. - -
அவன் தந்தை சர்க்கிள் குருசாமி சேர்வைக்கான கடிதமும் அவனுடைய கைச் செலவுக்கென்று கொஞ்சம் பணமும் கொடுத்தார். சிரமப்பட்டு அலைந்து திரிந்து கைமாற்று வாங்கியது என்றும் தெரிவித்தார். அவ்வளவு தான் தரமுடிந்தது என்பதை நியாயப்படுத்தவும், அதையும் அவன் மிக மிக அவசியமானதற்கு மட்டுமே செலவழிக்க வேண்டுமென்பத்ற்கு எச்சரிக்கையாகவும், அவர் அதை அவனிடம் சொல்லியதாகப் பட்டது. -
கட்சித் தொண்டர்கள் லாரியில் பயணம் செய்யும் போது என்னென்ன கோஷங்கள் போடவேண்டும் என்ப தைக் கட்சிச்செயலாளர் விளக்கிச் சொல்லியிருந்தார். ஒவ்வொரு லாரியிலும் கோஷங்களை ஆரம்பித்து வைப்ப தற்கும், கண்டிப்பாகக் கவனித்துக் கொள்வதற்கும்
யாராவது ஒருவர் பொறுப்பு ஏற்க வேண்டி வந்தது.