பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழி கூறாப் பண்பு

35

பெரும் பழியை மேற்கொண்டான் உதயணன். தத்தைக்காகவும் தன்னைப் பிறர் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் உதயணன் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மறுநாள் பொழுது விடிந்ததும் ஒரு துன்பமுமின்றி நருமதை திருப்பி அனுப்பப்பட்டாள். உதயணன் மாளிகையில் ஒரிரவு அவள் தங்கினாள். ஆனாலும் உதயணன் அவளிருந்த பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. ஊரிலே தன்னைப் பற்றிய பழியான மொழிகள் பரவுவதை அறிந்து உதயணன், மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போன்ற மனவுணர்ச்சியை அடைந்தான். எனினும் தத்தை பொருட்டு அதைப் பொறுத்தான் உதயணன். இதற்குள் அவன் எதிர் பார்த்தபடி இந்த விவரம் ஒற்றர்களால் பிரச்சோதன மன்னனுக்கும் அறிவிக்கப்பட்டது.

7. பழி கூறாப் பண்பு

ருமதைக்கும் உதயணனுக்கும் ஏற்பட்ட சம்பந்தம் பற்றி ஊரில் எழுந்த மறைவான பழிச் செய்திகளை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பிரச்சோதனன். மெல்லிய நாணங் கலந்த புன்முறுவல் ஒன்று அவன் இதழ்களில் தோன்றி மறைந்தது. உதயணன் செயலுக்காகப் பிரச்சோதனன் அவனைப் பழிக்கவில்லை; வியப்படையவுமில்லை. இது இளமைப் பருவத்தின் இயல்பு என்ற முடிவிற்கு வந்தான் பிரச்சோதனன்.

மாற்றான் செய்த சிறு செயலைத் தூற்றி இழித்துப் பேசித் துணிந்து மகிழ்ச்சி அடைய வேண்டிய பிரச்சோதன மன்னன் 'பருவம் செய்தவேலை’ என உணர்ந்து, உதயணனை மன்னிக்கும் நாகரிகப் பண்பு மிக உயர்ந்ததல்லவா?

உதயணன் நருமதையை விரும்பியதும், அவளோடு விளையாடியதும் தவறென்று பிரச்சோதனன் நினைக்கவில்லை. உதயணனால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தகுதி கொண்ட நருமதைக்குப் பல சிறப்புக்களை அவன்