பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

13

பசுமாடு கன்று போட்டுவிடுகிறது: அவசரத்தில் மண்ணைக் குழைத்து அள்ளிக் கட்டியிருந்த மாட்டுக் கொட்டத்தின் சுவர்கள் நன்றாக ஈரித்துப் போயிருந்தன. ‘சோ'வென்று பொழியும் மழை வேகத்தைத் தாங்கிக்கொண்டு அந்த ஈரச் சுவர்கள் எவ்வளவு நேரந்தான் நிற்கும்? மாடு கன்று ஈன்ற சற்று நேரத்தில் சுவர்கள் விழுந்துவிட்டன. வீட்டுக்குரியவனின் மனைவி கர்ப்பவதியாயிருந்தாள். அவளுக்கு அது நிறைமாதம். இன்றோ நாளையோ குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவச்சி சொல்லிட்டுப் போயிருந்தாள். வீட்டிற்குள் பாயில் உடலைக் கிடத்தியவாறே அவள் பிரசவ வேதனை பட்டுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குரிய தலைமகன் அன்று வயலுக்கு விதை விதைக்கப் போக வேண்டியிருந்தது. முதல் நாள் நல்ல ஈரப்பதம் பார்த்து வயலை உழுது தொழி கலக்கி விதைப்பதற்கு ஏற்றவாறு வைத்துவிட்டு வந்திருந்தான். வீட்டில் வேலை பார்த்து வந்த பண்ணைக்காரப் பணியாளுக்குக் குளிர் ஜுரம் வந்து சாகக் கிடக்கிறான். ஐந்து நாட்களாக அவன் வேலைக்கே வரவில்லை.எமனோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை குடும்பத் தலைவனுக்கு.

‘விதைக்கப் போகலாம்’ என்றால் வீட்டிலே மாடு கன்று போட்டிருக்கிறது. சுவர்கள் மழை தாங்காமல் சாய்ந்து விட்டன; மனைவியோ உடலில் வலி பொறுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருக்கிறாள். அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டான் வீட்டிற்குரியவன். அப்பொழுது தலைவிரி கோலமாக ஓடிவந்தான் ஒருவன். அழுகையும் புலம்பலுமாக அந்த வீட்டுப் பண்ணைக்காரன் குளிர் ஜுரத்தினால் இறந்துபோன செய்தியைக் கூறியபின் மூக்கைச் சிந்திவிட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பினான் வந்தவன். வீட்டுத் தலைவனுடைய குழப்பம் முன்னிலும் பெருகியது. ‘எது எப்படியானாலும் சரி! விதைக்கப் பதமாக இருக்கும் வயலை ஈரம் போகும்படி காயவிட்டுவிட்டால், அப்புறம் வருடம் முழுவதும் வயிறு காயவேண்டியதுதான்! ஆகவே ஓடோடியும் சென்று விதையை விதைத்து விட்டு