ராஜம் கிருஷ்ணன் 27
கால்நடை மந்தைகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பெண்களே திகழ்ந்தனர். கணவன்மார் அம்மந்தைகளைப் பேணிக் காப்பவர்களாகத்தான் இருந்தனர். இஸ்லாமிய சமய ஸ்தாபகரமான நபிகள் நாயகம் அவர்களே தம் மனைவியின் வாயிலாகப் பெற்று செல்வம் கொண்டே தம் கொள்கைகளை எங்கும் பரப்ப முடிந்தது.
பண்டைய ஆரோக்கியர்களிடையே ஏழு சான்றோர் இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரும் பெண்களேயாம்.
இன்றைய அரேபியா, மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் இரும்பு ஆணைகளுக்கிடையே மனித உரிமைகளையே இழந்த பூச்சிகளாக வேதனைப்படும் பெண்களை இங்கே நினைத்துப் பார்ப்போம். எத்தனை வீழ்ச்சி!
பண்டைய எகிப்திலும் தாய்வழி முறையே குடும்ப அமைப்பின் ஆதாரமாக நிலவியது. 'தாலமி' வமிசத்தினரின் சான்றாதாரங்களாகக் கிடைத்திருக்கும், "கணவனான உன்னை நான் வெறுத்தாலோ அல்லது வேறு ஒரு மனிதனை விரும்பினாலோ நான் நீ அளித்த பரிசுப் பொருளைத் திருப்பி விடுகிறேன்” என்பது ஒரு பதச்சோறு.
பண்டைய எகிப்தில் சொத்து சகோதரனுக்கன்றி சகோதரிக்குச் சென்றுவிடக்கூடியதொரு காரணத்தினாலேயே சகோதரன் சகோதரி திருமணம் அதிகமாக வழக்கிலிருந்ததாகத் தெரியவருகிறது.
இத்தகைய மணமுறை கிறிஸ்து பிறந்து இரண்டாம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததாம். வேதகால ஆரியச் சமுதாயம் தந்தை வழிக்குடும்பங்களின் சமுதாய அமைப்பாகவே திகழுகிறது. ஆனால் அதற்கும் முந்தைய சமுதாய உண்மைகளை, பல்வேறு தொல்குடி இனத்தாரிடையேயும் மலை மக்களிடையேயும் நிலவும் பழக்க