32 காலந்தோறும் பெண்
நமது ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் இடம் இல்லாமலாகிறது. அவை கொழுத்து வளருவதில்லை. கோதுமையை விதைப்பதாம், ஒரே இடத்தில் மனிதன் கட்டுண்டு கிடப்பதாம்!" என்றெல்லாம் பிரலாபிக்கிறார். பின்னும் "இந்த விவசாயத்தோடு விட்டதா?...அங்கே பெரிய தொழில் நகரம் என்று இந்த ஆண்களும் பெண்களும் பல பொருள்களுக்கு ஆசைப்பட்டுப் பித்துப்பிடித்து அலைகிறார்கள். குதிரையைக் கொடுத்து தாமிரப் பாண்டம் என்று வாங்குகிறார்கள். பெண்களோ, மஞ்சளாய், வெள்ளியாய், காதிலும், கழுத்திலும் உலோக ஆபரணங்களை வாங்கி மாட்டிக் கொள்கிறார்கள். இரண்டு குதிரைகளைக் கொடுத்து, ஒரு சிறு ஆபரணம், காதுக்கு மாட்ட...! இன்னும் சிறிது நாட்கள் போனால் நம்மிடையே உணவுக்கு ஒரு பிராணி மிஞ்சாது. தாமிரப் பாண்டமும், இந்த ஆபரணங்களுமே மிஞ்சும்!” என்று விவரிக்கிறார்.
மனிதன் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யும் நாகரிகத்தையும், பெண்கள் தங்கள் இயற்கை அழகை மேம்படுத்திக் கொள்வதாகக் கருதி, உலோக அணிமணிகளுக்கு அடிமையாகத் தொடங்கிய காலத்தையும் ராகுல்சாங்கிருத்தியாயன் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இது பெண்களின் சமுதாய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பமாகும்.
அவர் குறிப்பிடும் தென்புலத்து மக்கள், விவசாயம் செய்ததுடன், உழுவைக் கருவிகள், மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்களைச் செய்யவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பருத்தி விளைவித்து ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர். அது மட்டுமல்ல, அரசன், அமைச்சு, படை என்று ஒரு சமுதாயக் கட்டுக்கோப்புடன், நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்தனர். ஆடுமாடுகளைப் பழக்கி வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வதைப் பழக்கப்படுத்தினார்கள் என்றும் தெரிய வருகிறது. அரசன், அரசப் பிரதிநிதிகள், படைத்தலைவர்கள் ஆகியோரது இலட்சியங்கள்