1 s () பொய்ம் முகங்கள் பற்று இல்லாமல் வேளை, ராசி, தெய்வாதுக்ரஹம் என்று: அடிக்கடி சொல்லும் படித்த வக்கீல் ஆயிரம் வருஷம் பின் தங்கி வாழ்வதாக அவனுக்குத் தோன்றியது. படித்த வர்கள் எல்லாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் நெட்டுருச் செய்தவர்களாக இருப்பதுதான் நாட்டின் அபாய நிலை என்று எண்ணினான் அவன். அப்போது அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு இழையோடுவதைப் பார்த்து. விட்ட வக்கீல் ராமாநுஜாச்சாரி, "என்ன சிரிக்கிறேள்? மனசிவே படறதைச் சொல் லுங்கோ. நான் சொன்னது சரிதானே? கேஸ் ஜெயிக்கிற தும் ஜெயிக்காததும் உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்த, விஷயம்தான்'-என்று மறுபடியும் சொன்னார். . , 'அதெப்படி சார்? கேஸ்லே உங்க நியாயம், நீங்க அதைக் கோர்ட்லே எடுத்துச் சொல்லி விவாதிக்கிற முறை. இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு கேஸ்ை ஜெயிக்கவோ தோற்கவோ பண்ணும். அதை விட்டுட்டு என்னென்னமோ சொல்றீங்களே நீங்க?'-அவர் சுதர்சனனின் முகத்தைச் சந்தேகத்தோடு ஏறிட்டுப் பார்த்தார். சுதர்சனனோ மெல்ல மெல்லப் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அறிவினத்தோடு சேர்ந்து நிற்கும் அறிவையும், அல் நம்பிக்கையோடு சேர்ந்து நிற்கும் நம்பிக்கையையும், ஒழுங்கின்மையோடு சேர்ந்து தெரியும் ஒழுங்கையும், சோம்பலோடு சேர்ந்து தெரியும் சுறுசுறுப்பையும், தளர்ச்சி யோடு சேர்ந்து தெரியும் உழைப்பையுமே எங்கும் பார்க்க முடிந்தது. எவனும் எதையும் தன்னம்பிக்கையோடு செய்ய வில்லை. அதுக்ரகத்தையும், விதியையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிற தேசத்தில் விஞ்ஞானமும், உழைப்பும். எப்படி எப்போது வளரப் போகின்றன என்று மலைப்பாக இருந்தது அவனுக்கு. ஐம்பது கோடி மக்களில் நாற்பத். தொன்பது கோடியும் எஞ்சிய பெரும் பகுதியினரும் வெறும் திண்ணை வேதாந்திகளாகவே வளர்க்கப்பட்டு வருவது. ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு எரிச்சலூட்டியது.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/112
Appearance