உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பொய்ம் முகங்கள் 'ஏன்? பல பேரு கவர்மெண்ட் காலேஜ்லே வேலை அார்த்துக்கிட்டேகூட அதை எல்லாம் துணிஞ்சு செய்யிறாங் களே? எப்போ எப்போ எந்தெந்தக் கவர்மெண்ட் இருக்கோ அதுக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாத்திக்கிறாங்க. அறி வாளின்னு சொல்லிக்கிற கூட்டத்தைச் சேர்ந்த பல பேரு ஒரு தாசிமாதிரி அல்லது வைப்பாட்டி மாதரித் தன்னைப் போஷிக்கிற ஆளுக்கு விசுவாசத்தைச் சில்லறை சில்லறை. யாக் கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செய்யிறாங்களே? : "இப்படியெல்லாம் நீ பேசறதைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு சுதர்சனம்! ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடத்திலே மேனேஜ்மெண்டைப் பகைச்சுக்கிட்டு நீ வெளியேறி வந்தாச்சு. இனிமேலாவது நமக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உண்ர்ச்சி தேவை. வாழ்நாள் பூராவும் போராடிக்கிட்டே இருக்க முடியாது. அது சலிச்சுப் போகும். - இல்லே சுயமரியாதை உள்ளவனுக்கு அது சலிக்காது. அதுதான் உண்மை வாழ்க்கையாக இருக்கும் ரகு!" சரி: இப்ப அதெல்லாம் எதுக்கு வீண் விவாதங் களால் ஒரு நயா பைசாவுக்குப் பிரயோசனம் கிடையாது. ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாம், இங்கே ம்ெட் ராஸ்-க்குள்ளே எந்த கவர்மெண்ட் காலேஜிலேயும் ஹைஸ்கூல்லேயும் உன்னை மாதிரி ஆளுக்கு வேலை கிடைக் காது. கிடைச்சாலும் உனக்கு அது ஒத்து வராது." - நான் ஒத்து வரும்னு சொல்லியிருந்தால்தானே நீ மறுக்கனும்? நானே உங்கிட்ட அப்படிச் சொல்லலியே ரகு!' - . அப்போ இங்கே நம்ம ப்ேடோரியல்லே இருக்கிற பி.ஏ.-பி.யூ.எலீ. கிளாலோட புலவர் வகுப்புப் பயிற்சி களையும் உன்னை வச்சுத் தொடங்கிட வேண்டியது. தான.