உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி II I தலைமையாசிரியர் வாசுதேவன், வக்கீல் ராமாநுஜாச்சாரி. தமிழ்ப்புலவர் பிச்சாண்டியாபிள்ளை எல்லாருமே அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே திண்னை வேதாந்தமாக மாற்றியிருந்தார்கள். ஏப்பம் விடுவதி' லிருந்து வியர்ப்பது வரை இயல்பான நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தெய்வசங்கல்பத்தைக் காரணம் கற்பித்துப் பேசி னார்கள். விஞ்ஞானமும் அறிவுவாதமும், தலைதுாக்காத தேசத்தில் இப்படி ஆஷாடபூதித்தனமும், அறியாமையும் காடாகப் புதர் மண்டி வளர்வதைத் தடுக்க முடியாது போலும் என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று. வக்கீல் எதுவுமே இல்லாமே உங்க கேஸ் ஜெயிக்கணும்னா" அதுக்கும் ஒருவழி இருக்கு! உங்களுக்கு மணவை: மலரெழிலனைத் தெரியுமா? -என்று கேட்டார். . "யாருங்க? தெரியாதே?" ஆதர்சபுரம் வட்டச் செயலாளரைத் தெரியாமலா இங்கே இத்தனை நாளா இருக்கேள்?" . "என்ன செய்யிறது?. த்ெரிஞ்சுக்காமலே இத்தினிநாள் இருந்துட்டேனுங்களே...' - . . . 'அதனாலே பரவாயில்லே, இனிமேலாவது தெரிஞ்சுக் குங்கோ! அவர் பெரிய உபகாரி. பார்த்துப் பண்ணிக்குடுப் பார். லாஸ்ட் இயர் இப்பிடித்தான் என் டாட்டருக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரொம்ப சிரமப்பட்டுது. மலரெழிலன் சார் இல்லேன்னா அது நடந்தே இருக்காது.-- "இப்போ நான் வந்திருக்கிற காரியத்துக்கும் அவருக் கும் என்ன சம்பந்தம் கல்வி இலாகா சட்டம் கோர்ட் முறைகள் எல்லாம் தெரிந்த ஒருத்தர் கிட்டத்தான் இதைப் பற்றி நான் விசார்க்க முடியும். எனக்கு வேறே இடத்திலே வேலை கிடைக்காதுங்கிறது இல்லே. இந்த ஊர்லே இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து வேலையை விட்டிட்டுப் போறதுக் காக நான் கவலைப்படவும் இல்லே. அநாவசியமா என் பேரைக் கெடுக்கணும்கிறநோக்கத்திலே, ஏதோ nரியஸ்