உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛26 நிசப்த சங்கீதம்

வந்து முத்துராமலிங்கத்தைச் சூழ்ந்து நின்று கையெழுத்து

வாங்கிக்கொண்டு பாராட்டினர். -

கூட்டத்தில் சில இரகசியப் போலிஸாரும் வந்திருந்தது முத்துராமலிங்கத்துக்குத் தெரியாது. அவர்கள் வேண்டு மென்றே திட்டமிட்டு அங்கு அனுப்பப்பட்டிருப்பதும் அவனுக்குத் தெரியாது. .

அன்று அந்தக் கூட்டத்திற்கு மங்காவும் அவனுடன் வந் திருந்தாள். கல்லூரி நாட்களில் அவனுடைய விவாதங்கள். பேச்சுக்கள், கவிதைகளை அவள் நிறையக் கேட்டு இரசித் திருந்தாலும் கணவனின் கவிதை என்ற புதிய உரிமையோடு அந்தக் கவிதைக்காக அன்று அவனைப் பலர் பாராட்டிய போது அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இரண்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் கவியரங்கம் முடிந்து முத்து ராமலிங்கமும் மங்காவும் படியிறங்கி எல்.எல். ஏ. கட்டிட முகப்புக்கு வந்தபோது யூனிஃபாரம் அணியாத ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கத்தின் அருகே வந்து தமது அடையாள அட்டையையும் காண்பித்து, சார்: களம்பூர் மிராசுதார் கொலை சம்பந்தமாகச் சந்தேகத்தின்பேரில் உங்களைக் கைது செய்கிறோம்' என்றார். முத்துராமலிங்கம் அவர்களைப் பதிலுக்குக் கேட்பதற்கு முன் மங்காவே முந்திக்கொண்டு, "நான்ஸென்ஸ் அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? என்று விசாரித்தாள். : . .

களம்பூர் மிராசுதாரைக் கொன்ற நக்ஸ்லைட்டுகள் அவரது சடலத்தைச் சுற்றித் தூவியிருந்த பிரசுரங்களில் ஒன்றில் காணப்பட்ட ஒரு வாக்கியமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருக்கிறது மிஸ்டர் முத்துராமலிங்கம்!” * . . .

எந்த வாக்கியம்?’’ - அதெல்லாம். இப்போது இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. யூ ஆர் அண்ட்ர் அரெஸ்ட் விசாரணையின்போது எல்லாம் தானே தெரியும்'- -