பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117

மக்களும் யானும் அநிலமதாகும் அமுதினைக்
கொள்வோம் யார்எதிர் எமக்குளார் உலகில்
சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை
வணங்கித் தலை செய்யும் எம்மை நிலை செய்
சற்கீர்த்திச் சாளுவக் கோப்பைய னுதவும்
மந்தர புயத்தான் திப்பைய ராயன் மகிழ்வொடு விலையிலா
அன்னோன் வாக்கினாற் குபேரன் ஆக்கினான்
அவனே மாசில் ஈசான் பூதியே”

கலை = ஆடை, உதரம் = வயிறு, நிருதி = திசையசுரன், அநிலம் = காற்று, சந்ததம் = எப்போது, அந்தம் = அழகு இந்திரன், கலையாயிருப்பது = ஆடையில் ஆயிரம் கிழிசல்கள் இந்திரனின் ஆயிரம் கண்கள்போல் இருப்பது.

திப்பைய ராயனைப் பற்றி வேறொருவரிடம் சொல்லுவது போல அவனிடமே கூறுகிறார் இந்தப்பாட்டை!

“இந்திரன் உடலில் ஆயிரங்கண்கள் போலக் கிழிந்த ஆடை அணிந்தேன். பசியோ வயிற்றை நெருப்புப் போல வாட்டுவது. வறுமைப்பட்ட மனிதன்தானே என்றெண்ணி எமன் கூட என்னை ஒரு பொருட்டாக மதித்து என்பக்கம் வரக் கருதவில்லை.நிருதியும் என்னை அவ்வாறே அவமதித்து ஒதுங்கியிருக்க வேண்டும். துன்பங்களை எண்ணிக் கலங்கிய என் கண்களில் வருணன் கண்ணீராக இடைவிடாமல் வடிந்து கொண்டிருந்தான். யானும் என் மக்களும் உண்ணுவதோ காற்றாகிய அமுதம்தான்.அதுதான் எங்களுக்கு உணவாகக் கிடைத்தது. நாங்கள் கையெடுத்துக் கும்பிடக் கொடுத்து வைத்தவன் தரித்திரராசன் ஒருவன்தான். இப்படி அமைந்த என் பெருமையை எண்ணினால் எனக்கு ‘நிகர்’ உலகம் முழுவதும் இல்லை.இவ்வாறு அஷ்டதிக்குப் பாலர்களில் (இந்திரன் முதல் குபேரன் ஈறாக எண்மரும் அஷ்டதிக்குப் பாலகர்களாவர்) இருவர் குறைய மற்ற ஆறு பேரும் நிறைந்த என் வறுமை வாழ்வைத் தீர்த்துக் கொள்ள நினைந்து திப்பைய ராயனிடம் சென்றேன். அவனோ, தன் வாக்கினால் என்னைக்