பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 459

திற்காக இராவணசாமியின் பஸ்ஸை எரிக்கத் துரண்டி னோம் என்று பொய்க் குற்றம் சாட்டி என்னையும், தொழிற்சங்கச் செயலாளராகிய இந்த நண்பரையும் கைது செய்து உள்ளே வைத்தார்கள். பேயரசு செய்யும் போதில் பிணம் தின்னுவது கூடச் சட்டமாகிவிடும். அப்படித்தான் இப்போதெல்லாம் நடக்கிறது” என்று மறுமொழி கூறினார் மணவாளன். அப்போது வேறு ஒரு மாணவன், “நேற்று இரவு இராவணசாமியின் ஆட்கள் உங்க கடைக் கதவை உடைச்சு எல்லாத்தையும் சூறையாட மூணு தடவை திரும்பத் திரும்பக் கடப்பாரையும் கம்புமாத் தேடி வந்தாங்க. அவங்க அப்பிடி வருவாங்கன்னு எதிர்பார்த்தே நம்ப ஊழியர்கள் கடை வாசல்லே கூட்டமா இருந்த தாலேதான் கடை பிழைத்தது"- என்று அண்ணாச்சி யிடம் கூறினான். அதைக் கேட்டுச் சிரித்தார் அவர்.

“சத்தியம், நியாயம், தர்மம், நீதி, ஜனநாயகம் எல்லாத் தையுமே சூறையாடறவங்க என் கடையைச் சூறை யாடறதுக்கா தயங்கப் போறாங்க : இப்படி எல்லாம் நடக்கும்கிறது. நான் எதிர்பார்த்ததுதான் தம்பி.” என்றார் அண்ணாச்சி. எந்த இழப்புக்காகவும் கவலைப்படாத ஒரு தியாகியின் குரலாக ஒலித்தன அவர் சொற்கள்.

“சுதந்திரத்தின் அருமை பெருமை தெரியாத ஒரு மந்தையிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் இப்படி எல்லாம்தான் நடக்கும். சுதந்திரம் என்பது பொறுப்புக் களிலிருந்து விடுபடுவது என்று புரிந்து கொண்டு விட்டவர்கள் நிறையவுள்ள நாடு இது. பொறுப்புக்களோடு அதிகம் இணைவதே உண்மையான சுதந்திரம் என்று எல்லோருக்கும் புரியவைக்கிற வரை இந்த நாடு சீர்படாது. அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம். ஆனால் அதே சமயம் பொறுப்புக்களோடு நம்மை அதிகமாகப் பிணைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பிணைத்துக் கொள்ளாத தால்தான் இவ்வளவு வினையும் வந்திருக்கிறது என்றார் தொழிற்சங்கச் செயலாளர். -

“எல்லா வகையிலும் பொறுப்பில்லாத மக்களுக்குப் பொறுப்பில்லாத ஆள்பவர்கள்தான் கிடைப்பார்கள்.