பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

157

ஸ்டுடன்டுன்னு பேர் வாங்கி முன்னேறுவதற்காகத்தான் வந்திருக்கோம்”

“நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேட்டு உங்களுக்காக அநுதாபப்படறேன் மிஸ்டர் கனகராஜ் எம். ஏ. படிக்கிற கிணற்றுத் தவளைகளும் நம்ம நாட்டிலே இருக்காங்கன்னு தெரியறப்ப ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.”

“கிணறுதான் தவளைக்குப் பாதுகாப்பான இடம். கிணறுகளில் இருக்கிறவரை சுகம்தான். கிணறுகளை விட்டு வெளியே வந்து உயிரிழக்கும் ஆபத்துகளைச் சந்திக்க நேர்வதைவிடக் கிணறுகளே பாதுகாப்பானவை.”

“தவளைகளுக்கு அது சரியாகக்கூட இருக்கலாம். மனிதர்களுக்குப் பொருந்தி வராது. ஆபத்துக்களைச் சந்திக்கவும், எதிர் கொள்ளவும், போராடவும், வெற்றி பெறவும் மனிதர்கள் தயாராயிருக்க வேண்டும். அந்தத் துணிவுதான் மானுட இலட்சணம்”

“நன்றாகப் பேசுகிறீர்கள் மிஸ் சுலட்சணா! நீங்கள் பொருளாதாரத்துக்குப் பதில் எம். ஏ. பிலாஸ்பி எடுத்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு பிலாஸ்பி நன்றாகப் பேச வருகிறது.”

இதைச் சொல்லிவிட்டு தன் அரும்பு மீசையின் கீழே ஒழுங்கான வரிசையான அழகான வெண்பற்கள் தெரியச் சிரித்தான் கனகராஜ். அசப்பில் சராசரி சினிமாக் கதாநாயகன் போலிருந்த அவனிடம் அழகு இருந்தது. படிப்பு இருந்தது. பணம் இருந்தது. ஆனல் சிந்தனை இல்லை. துணிச்சல் இல்லை. ரிஸ்க் எடுத்துக் கொள்ள முன்வரும் எந்த மனோதிடமும் இல்லை.

இந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களில் வாயில் வெள்ளி ஸ்பூனுடனே பிறந்த