பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 நினைவுக் குமிழிகள்-2

திற்கு உண்டு; தமிழக வரலாற்றில் முக்கிய இடம்பெற வேண்டியதொன்று இது. நாடாளுமன்றத்திலும் இத்திட்டங் கள் ஒரு மனதாகப் பாராட்டப்பெற்றன. இக்காலத்தில் 'அதிசய மின்னணு' என்ற என் நூல் வெளிவந்தது. என் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் போக்கில் இந்த நூலைச் சுந்தர வடிவேலு அவர்கட்கு,

நற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன் நல்லிளங் கோவுயர் கபிலன் கொற்றமார் கீரன் பாரதி தங்கிக் குலவிய செந்தமிழ்த் தாயின் பற்றுறு வயிற்றில் திருவொடு தங்கிப்

பண்பொடு தோன்றிய செல்வர் கற்றவர்க் கினியர்; சுந்தர வடிவேல்

கண்ணியர்க் குரியதிந் நூலே. - என்ற பாடல்மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். துறையூர் வாழ்வில் உள்ள நிகழ்ச்சிகள் குமிழியிடும்போது பின்னர் எழுந்த நிகழ்ச்சிகள் மாணாக்கர் முன்னேற்றம் பற்றியே இருந்ததால் அவையும் ஈண்டு இடம் பெற்றன.

பொதுவாக மாணாக்கர்கள் கல்வி பெறுவதில் பிற் போக்குத் தன்மை (Backwardress) ஏற்படுவதற்கு அவர்கள் வாழும் இல்லத்தின் சூழ்நிலையே காரணமாகும் என்பதைக் கல்விப் பணியில் ஈடுபட்டிருப்பவர் நன்கு அறிவர். செல்வர்கள் வீட்டில் நல்ல சூழ்நிலை அமைந்திருப்பினும் அவர்களது கோலாகலமான வாழ்க்கை முறைகள், சதா வானொலியை இயங்கிக் கொண்டிருக்கச் செய்தல். பார்வை யாளர்கள் அடிக்கடி வருதல் போன்றவை கல்விக்கேற்ற கும் நிலையைக் கெடுப்பதாக அமைந்துவிடுகின்றன. பெற்றோர். கள் கற்றவர்களாக இருப்பினும் அவர்கள் தம் குழந்தை களைக் கவனிப்பதற்கு நேரம் இருப்பதில்லை. ஆனால்,

4. கழக வெளியீடு.