உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புதுவை (மை)க் கவிஞர் 1. பாட்டுக்கு ஒரு புலவர் : பாரதியார் இருப தாம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்ற ஒரு மாபெருங் கவிஞர். பாமர மக்களும் குறைவான கல்வி பெற்றவர்களும் இலக்கியத்தைச் சுவைக்க முடியும் என்ற கொள்கைக்கு வழியமைத்துத் தந்தவர் இப் பெருமகனார். பாட்டுத் திரத்தாலே-இவ்வையந்தைப் பாலித்திட வேணும்! என்ற பேராசை கொண்டவர். நமக்குத் தொழில் கவிதை' என்று தம் தொழிலை வெளிப்படையாகக் கூறியவர். என் நாவிற் பழுத்தசுவைத் தெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே’ என்று வேண்டி நின்றவர். செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்." என்று தாம் படைக்கும் கவிதைகள் எல்லாம் அன்னை பராசக்தியின் அருளால்தான் வெளிவருகின்றன என்ற நம்பிக்கை கொண்டவர். இத்தகைய கவிஞர் பெருமான், 1. தோ. பா : காணிநிலம்-3 2. வி. நா. மாலை-25 3. டிெ 4 டிெ -30 –26