உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 43 முறையில்-மக்களிடம் அமைய வேண்டும் எனக் கருதினாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இவற்றையும் காண்போம். பாரதியின்காலத்தில் மக்களிடம் மூடப்பழக்கங்கள்' நிறைந்திருந்தன. பேய்கள், மந்திரவாதியின் செயல்கள், யந்திர சூனியங்கள், பொய்ச்சாத்திரங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை-இவற்றைக் கண்டு நெஞ்சு பொறுக்கு தில்லையே” என்று நாெந்து கொள்ளுகின்றார். 'கண்ணன்-என்தாய் (2) என்ற பாட்டில், சாதிக் கொடுமைகள், சாதிப் பிரிவுகள், பலபல தெய்வ வழிபாடுகளால் பிரிவுகள்-இவற்றைக் கண்டு இரங்குகின்றார், வெள்ளை நிறப் பூனையொன்று, சாம்பல்நிறம், கருஞ் சாந்து நிறம், பாம்பு நிறம், பாலின் நிறம்-இந்நிறங்களின் குட்டிகள் போட்டாலும் அவை யாவும் ஒரேதரமானவை என்று எடுத்துக்காட்டுகின்றார். எங்கும் சகோதரத்தன்மை நிலவ விழைகின்றார். சாத்திரம் கோடி வைத்தாள் - அவை தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத் . தாள: மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் முத்தவர் பொய்நடையும் - இள முடர்தம் கவலையும் அவள் புனைந்தாள். 27. தே. கீ. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை.