உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 9. கோணங்கி குறிப்பிடத்தக்கவை. பாப்பா பாட்டைக் கவிமணி, பாப்பா பாட்டிலே - நெஞ்சைப் பறிகொ டுத்தேனடா ! சாப்பா டேதுக்கடா ! - சீனி சர்க்கரை எதுக்கடா ! (12) என்று உரைத்துக் காட்டுவார். புதிய கோணங்கியில், படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் ! போவான், ஐயோவென்று. போவான் என்ற அடிகள் குடுகுடுப் பாண்டி வாக்கில வருபவை. 'முரசு தலைப்பில் எல்லாப் பாடல்களும் நெஞ்சை ஈர்ப்பவை. - தனிப் பாடல்கள் : இத்தொகுப்பில் 24 பாடல்கள் உள்ளன. இவற்றுள் காலைப் புனைவு, மாலைப் புனைவு, வான்மதி, காற்று, மழை, காடு பற்றிய புனைவு போன்றவை இயற்கை எழிலைப் புனைந்து காட்டும் ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த்தை நினைவுகூரச் செய்கின்றன. தனிப்பட்ட பெரியார்களைப் பற்றிய பாடல்கள் அற்புத மாக அமைந்துள்ளன. - செம்பரிதி ஒளிபெற்றான், பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரெலாம் உவத்தல் செய்வார் ?