உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 35 6. சமரச நோக்கர்: பாரதியார் ஒரு சமரச நோக்கர் என்பதை அவர்தம் ப டல் க ள ல் தெளியலாம். சமயச் சான்றோர்களுள் தாயுமான அடிகள், இராமலிங்க அடிகள் இவர்களே சமயங் களுள் ஒரு சமரச நிலையை நிலை நாட்ட முற்பட்டவர் கள். சமயச்சான்றோர் வரிசையில் வைத்து எண்ணப் படா விட்டாலும் மேற்கூறிய இரு பெரியார்களை அடுத்து, சமயங்களுள் ஒரு சமரச நிலையை ஏற்படுத்த முயன்றவர் பாரதியார் என்று மதிப்பிடுவதில் தவறில்லை. பண்டை யோர் வழிபடும் தெய்வங்களான விநாயகர், முருகன், நாமகள், பூமகள், கண்ணன், இராமன், கோவிந்தன், சக்தி என்பவற்றையெல்லாம் வழிபட்டு மங்களாசாசனம் செய்துப் போற்றினாலும், எல்லாக் கடவுளர்களும் ஒரே பரம் பொருள் என்ற உணர்ச்சியை அடிநாதமாகக் கொண்டவர் நம் கவிஞர் பெருமான் என்பதற்கு அகச்சான்றுகள் உள்ளன. பாஞ்சாலி சபதத்தில் காப்புப் பகுதி பரப்பிரம்மத்தின் துதியாக அமைந்துவிடுகின்றது. ஒமெனப் பெரியோர்கள் - என்று ஒதுவ தாய்வினை மோதுவதாய் தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர் தேய்ப்பதுவாய் நலம்வாய்ப்பதுவாய் நாமமும் உருவமும் அற்றே - மனம் நாடளி தாய்ப்புத்தி தேடரிதாய் ஆமெனும் பொருளனைத்தாய் - வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய், நின்றிடும் பிரும்மம் என்பார் - அந்த நிர்மலப் பொருளை நினைத்திடுவேன்’ 1. பாஞ்சாலி சபதம்-1, 1:1 (பிரும்ம துதி)