உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 45 குறிப்பிடும். கண்ணன் பாட்டு அமைவதில் பாரதியா ருக்கு இந்த சம்பந்த ஞானம் வழிகாட்டியிருக்க வேண்டும். எம்பெருமானுக்கும் நமக்கும் (சீவான்மாக் களுக்கும்) உள்ள சம்பந்தம் ஒன்பது வகைப்படும் என்பதை வைணவ மந்திரங்களுள் ஒன்றான திருமந்திரத் தால் அறிகின்றோம். இந்த ஒன்பது வகை உறவு முறை களைப் பிள்ளை உலக ஆசிரியர் அருளியுள்ள நவவித சம்பந்தம்” என்னும் நூலில் விரிவாக விளக்கப் பெற் றுள்ளது. இந்த உறவு முறைகளை ஆழ்வார் பாசுரங் களிலும் காணலாம் தவிர, இஷ்ட தெய்வத்தைப்-வழிபடு கடவுளைப் - பல்வேறு பாவனைகளால் வழிபடலாம் என்று நம் நாட்டுப் பக்திப்பனுவல்களும் கூறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களில் எம்பெருமானைத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று பேசப் பெற்றிருப்பதையும் காணலாம். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் பாரதியார் கண்ணனைத் தந்தையாகவும், தாயாகவும் தோழனாகவும், சீடனாகவும், அரசனாகவும், காதலி யாகவும், காதலனாகவும், சற்குருவாகவும், தெய்வமாகவும் பாவித்துப் பாடியுள்ளார் என்று கருதலாம். பாரதியாரின் கண்ணன் பாட்டி"லிருந்து ஒன்றிரண்டு உறவு முறைகளைக் காண்போம். கண்ணன் - என் தாய் : இறைவனைத்தாய் நிலையிலும் தந்தை நிலையிலும் வைத்து எண்ணுவர் சமயச் சான்றோர். அன்பு காட்டி வேண்டியவற்றை ஈவதால் தாயும், கல்வி முதலியவற்றை நடத்துவதில் தந்தையும் பொறுப்பாக இருப்பதால் அவர்கள் உவமையாகக் கொள்ளப் பெற்றனர். 2. பதினெட்டு (அஷ்டாதச) இரகசிய நூல்களில் இஃது ஒன்று.