உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器要 புதுவை (மை)க் கவிஞர் அனைத்திற்கும் வளைந்து கொடுக்கும்’ என்றஉண்மையை அறிவர். அப் பொழுதுதான் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற வசையும் நீங்கும். தமிழ் மொழி யும் வளர்ந்து மேலும் வளம் பெறும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும் என்ற பாட்டடியில் கவிஞரின் ஞானம் கனிந்த நலம்" தெளிவாகப் புலனாகும். பயிற்றில் பலகல்வி தந்து - இந்தப் - பாரை உயர்த்திடல் வேண்டும்" என்று கவிஞர் அறிவியல் கல்விக்கு ஆற்றுப் படுத்து கின்றார். தாய்மொழி மூலம் அக்கல்வி பெற வாய்ப்பு அமைக்கப் பெறுமானால் பருத்தி புடவையாய்க் காய்த்தது போன்ற பயனை நல்கும். விலைப் பாலைவிட முலைப்பால் சிறந்ததல்லவா? மந்திரம்கள் போம்வினைத் தந்திரம் கற்போம்; வானையளப் போம் கடல் மீனையளப் போம்: சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்: சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.' 9. டிெ - டிெ - 4 10. பா. பா. முரசு - 30 11. தே. .கீ. பாரத தேசம்-11